கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் தைரியமும் அதிகரிக்கும் நாள்!!

0
260
#image_title

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சியும் தைரியமும் அதிகரிக்கும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு காலையில் மகிழ்ச்சியும் மாலையில் தைரியமும் அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய ஒற்றுமை மிக சுபிட்சமாக காணப்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பாக வந்து சேரும். உத்தியோகத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைவதால் சந்தோஷமான சூழ்நிலைகளை காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக நீங்கள் கேட்டிருந்த உதவிகள் இன்றைய தினம் உங்கள் கைக்கு வந்து சேரும்.

அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்திகள் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குதூகலமாக காணப்படுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமான சூழ்நிலையை காண்பார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். மூத்த வயது சேர்ந்த அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சிறந்து விளங்குவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு சந்தோஷமான செய்தி கண்டிப்பாக கிடைக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீலநிற ஆடை அணிந்து எம்பெருமான் சிவபெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியமும் பயணமும் உண்டாகும் நாள்!!
Next articleதுலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அலைச்சலும் ஆனந்தமும் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here