Astrology

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு சுப ஸ்தானத்தில் சந்திர பகவான் இருப்பதால் உடல் நிலைகளில் சற்று கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை குறையலாம் என்பதால் பேசும் வார்த்தைகளில் கவனம் அவசியம்.

வருமானம் நீங்கள் எதிர் பார்த்தபடி வந்து சேரலாம். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் உண்டாகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண ஒப்பந்தங்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு தேவைப்படும். மாணவ மாணவிகள் கல்வியில் கவனம் செலுத்துவார்கள்.

அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு உயரப் பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள்.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்கள் இல்லத்திற்கு வந்த அனுகூலமான ஆலோசனைகளை வழங்குவார்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான நீல நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயாரை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும் .

Leave a Comment