கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் ஆன்மீக எண்ணங்களும் நிறைந்த நாள்!!

0
201

கன்னி-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயணமும் ஆன்மீக எண்ணங்களும் நிறைந்த நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயணமும் ஆன்மீக எண்ணங்களும் நிறைந்த நாள். நிதி உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பு என்றாலும் கொஞ்சம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு அனுகூலமான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும். கொடுக்கல் வாங்கல் சிறப்பான பாதையில் செல்லும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் சிறுதூறு பயணங்களை மேற்கொள்வார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் உங்களின் ஆற்றலை கண்டு வியந்து போவார்கள். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleதுலாம்-இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு தைரியமும் பயணமும் உண்டாகும் நாள்!!
Next articleநரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையா? நீங்கள் இந்த உணவை மட்டும் எடுத்துக் கொண்டால் உடனடி தீர்வு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here