கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! விழிப்புணர்வு தேவைப்படும் நாளாக உள்ளது!

0
193
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!
Virgo – Today's Horoscope!! The day when the confusion from the mind decreases!

கன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! விழிப்புணர்வு தேவைப்படும் நாளாக உள்ளது!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விழிப்புணர்வு தேவைப்படும் நாளாக உள்ளது. ஏதேனும் முயற்சி எடுக்கும் முன் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. நிதி சமநிலையில் இருக்கக்கூடும். கணவன் என் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பணியிட மாற்றங்கள் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பாக சில பயண வாய்ப்புகள் மேம்படும். உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பது நல்லது. குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில வீண் செலவுகள் வந்து சேரலாம். அரசியல்வாதிகள் முன்னேற்றம் காண்பார்கள்.

கலைத்துறை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு சில செலவுகளை மேற்கொள்வார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ரோஸ் நிற ஆடை அணிந்து நரசிம்ம சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம் ராசி – இன்றைய ராசிபலன்!! உங்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும் நாள்!
Next articleதேவையற்ற கொழுப்புகள் ஒரே வாரத்தில் கரைய வேண்டுமா! ஒரு டம்ளர் இதனை குடித்தால் போதும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here