மீண்டும் புதிய கட்டுப்பாடு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Photo of author

By Sakthi

கடந்த 2 ஆண்டு காலமாக தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் கோவில்கள் வழிபாட்டு தலங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது.

காரணம் பொதுமக்கள் அதிகமாக ஒன்று கூடினால் நோய்த்தொற்று பரவாமல் ஏற்படுவதற்கான அபாயம் இருந்ததால் இதுபோன்ற நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டனர். குறிப்பாக தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கோவில்களும், வழிபாட்டுத் தளங்களும், ஒட்டுமொத்தமாக மூடப்பட்டன. இதனால் பல கோவில்களில் முக்கிய திருவிழாக்கள் தடை செய்யப்பட்டனர். வருடம் தோறும் தவறாமல் நடைபெறும் மதுரை கள்ளழகர் கோவில் திருவிழா கூட சென்ற வருடம் நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்தது. ஆனால் அந்த கோவில் விழா கமிட்டி குழுவினர் எடுத்த தீவிர முயற்சியின் காரணமாக, அந்த திருவிழா சென்ற வருடம் கூட தடைபடாமல் நடைபெற்றது.

நோய்த்தொற்று பரவல் ஏற்படுவதன் காரணமாக, மத்திய ,மாநில அரசுகள் பொதுமக்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதித்து இருக்கிறார்கள். ஆனாலும் பொதுமக்கள் இதனை பெரிய அளவில் எடுத்துக் கொள்ளாததால் நோய் தொற்று பரவல் அதிகரித்த வண்ணம் இருந்தனர்.பின்பு இது தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதன் காரணமாக, அனைவரும் அரசு அறிவித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றத் தொடங்கினார்கள்.இந்த சூழ்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் இருக்கின்ற அனைத்து கோவில்களிலும் வெள்ளி, சனி ,ஞாயிறு உள்ளிட்ட தினங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியாளர் மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் விருதுநகர் மாவட்டத்தில் தற்சமயம் நிலவி வரும் நோய் தொற்று சூழ்நிலையை மனதில் வைத்து தமிழக அரசு வெளியிட்டு இருக்கின்ற வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்டத்தில் இருக்கின்ற மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். அதோடு அரசாங்கம் வெளியிட்டிருக்க கூடிய வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து கோவில்களிலும் வெள்ளி, சனி, ஞாயிறு உள்ளிட்ட தினங்களில் பக்தர்களின் வழிபாட்டுக்கு தமிழக அரசு தடைவிதித்து இருப்பதாக கூறியிருக்கிறார்.

அதோடு ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு நாச்சியார்கோவில், திருத்தங்கல் அருள்மிகு திருநின்ற நாராயணப்பெருமாள் கோவில், அருள்மிகு சீனிவாசப் பெருமாள் கோவில், உள்ளிட்ட மாவட்டத்தில் இருக்கக்கூடிய அனைத்து திருக்கோவில்களிலும் வார இறுதி தினங்களில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் நோய் திட்டங்களில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து மறு உத்தரவு வரும் வரையில் வார இறுதி நாட்களில் பக்தர்களின் வருகையை குறைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.