தங்களுக்கு இந்த தோஷம் இருக்கிறதா? அப்படி என்றால் திருமணமே செய்ய வேண்டாம்!

0
805

விஷ கன்னிகா தோஷம் குறிப்பிட்ட நாள் நட்சத்திரம் திதி மூன்றும் ஒன்றிணைந்து வரும் நாளில் பிறந்து 2, 4, 5, 8, 7, 12 பாவங்களும், பாவாதிபதிகளின் பாதிப்படையும் நிலையில் மிக மோசமான பாதிப்பை தருகின்றது.

நாள்– ஞாயிறு, செவ்வாய், சனி.

திதி– துவி திதியை, சப்தமி, துவாதசி.

நட்சத்திரம்– ஆயில்யம், கார்த்திகை, சதயம்.

ஜனன கால ஜாதகத்தில் திருமணம் தொடர்பான பாவங்களான 1,2,7,8 பாவங்கள் முழுவதும் கெட்டு பாவக அதிபதிகளும், சுக்கிரனும் வலிமையற்று இருந்தால் அந்த ஜாதகம் விஷ கன்னிகா தோஷம் உடையதாகும்.

இந்த தோஷம் உடைய ஜாதகருக்கு திருமணம் நடைபெறாது. திருமணம் நடந்தாலும் வெகு நாட்களுக்கு நிலைக்காது. விஷ கன்னிகா தோஷம் பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் இந்த தோஷம் என்பது அரிதாக உண்டாகக்கூடிய கிரக அமைப்பு ஆகும்.

விஷ கன்னிகா தோஷம் என்பது முறையாக இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று அதன் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவது. இது ஒரு முறை அல்ல மூன்று, நான்கு முறை கூட தொடரும்.

கடைசியாக வாழ்க்கைத்தணை இல்லாமல் தனியாகத்தான் வாழ வேண்டி திருமணத்தையும் கொடுத்து அதில் பலவித பிரச்சனைகளையும் உண்டாக்கி, அடுத்தடுத்து திருமணங்களிலும் மன ஒற்றுமை ஏற்பட விடாமல் தடுத்து, மணவாழ்க்கையை கேள்விக்குறியாக்குகிறது விஷ கன்னிகாதோஷம் ஒரே ஆறுதல் ஒரு குழந்தை பாக்கியமாவது கிடைத்து விடும். அது மட்டுமே ஆறுதலை தரக்கூடியதாக இருக்கும்.

இப்படியான ஜாதக அமைப்பை கொண்டவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பதே சிறப்பு இரண்டாவது திருமணமோ வாழ்க்கை இழந்த நபரை திருமணம் செய்யும்போதோ தோஷத்தின் வீரியம் குறையலாம். எப்படிப்பட்ட திருமண தோஷமாக இருந்தாலும், எந்த விளைவாக இருந்தாலும் தசா புக்தி கோச்சார கிரகங்கள் தொடர்பு பெறும் காலங்களில் மட்டுமே சுப, அசுப விளைவுகள் உண்டாகும்.

ராகு, கேது, செவ்வாய் உள்ளிட்டவை மட்டுமே திருமணத்தை தடை செய்யும் என்ற பொதுவான மூடநம்பிக்கையை கை கழுவி தடைக்கான காரணத்தை முழுமையாக கண்டறிந்து, சரியான பரிகாரம் செய்து பயன்பெற வாழ்த்துக்கள்.

Previous articleதர்பூசணி பேஸ் பேக்! ஒரு முறை நீங்களும் ட்ரை செய்து பாருங்கள்!
Next articleஇந்த விளக்கை மட்டும் ஒரு முறை ஏற்றி பாருங்கள்! எப்பொழுதும் நீங்கள் கோடீஸ்வரர் தான்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here