உடையும் திமுக-விசிக கூட்டணி!! “இங்கு ஒருவர் மட்டும் ஆளப் பிறக்கவில்லை” ஆதவ் அர்ஜுனா பேச்சால் பரபரப்பு!!

Photo of author

By Sakthi

VCK:விசிக துணை பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா அவர்கள் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது.

திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் கட்சிகளில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகும். திமுக கூட்டணியில் திமுக வுக்கு அடுத்து பலம் பொருந்திய கட்சி என்றால் அது விசிக தான். விசிக கூட்டணியில் இருப்பதால் தான் வட மாவட்டங்களில் திமுகவினால் தேர்தலில் வெற்றி பெற முடிகிறது என்ற கருத்து  நிலவி வருகிறது. ஒட்டுமொத்த தலித் மக்களின் வாக்குகள் விசிக  கூட்டணியில் இருப்பதால்  திமுகவிற்கு கிடைக்கிறது.

இருந்த போதிலும்  திமுக கட்சி தேர்தலில் மிக குறைவான எம்.பி சீட்டுகளும், எம்.எல்.ஏ சீட்டுகள் தான் கொடுக்கிறது என்ற குற்றச்சாட்டு விசிக கட்சியிடையினரே எழுந்துள்ளது. மேலும் விசிக வுக்கு தேர்தலில் போட்டியிட பொது தொகுதி  வழங்க வேண்டும் என விசிகவினர் கூறி வருவது  குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் விஜய் தவெக  அரசியல் கட்சி ஆரம்பித்து இருந்தார்.

மேலும் தவெக கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற கொள்கையை அறிவித்தார். இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக திமுக அரசின் ஆட்சி அதிகாரத்தில் விசிகாவிற்கு பங்கு வேண்டும் என்ற கருத்து சமூக வெளியில் உலாவியது. இந்த நிலையில் தான் விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதாவது மதுரை மாவட்டத்தில் திருமண விழாவில் கலந்து கொண்ட  ஆதவ் அர்ஜுனா அவர்கள்.   செய்தியாளர்களிடம் பேசிய போது “இங்கு ஒருவர் மட்டும் ஆளப் பிறக்கவில்லை”, திருமாவளவன் கனவு விரைவில் நினைவாகும். தலித் மக்களிடம் அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என்றார் மேலும் எங்களுக்கான அரசியலை எங்களால் உருவாக்க முடியும்  என்று கூறி இருந்தார்.