நான்கு மாதங்களில் மட்டும் 8 முறை வருகை.. அப்படி தமிழகம் மீது பிரதமர் மோடிக்கு என்ன பாசம்!!

0
159
Visiting 8 times in four months only.. What affection does Prime Minister Modi have for Tamil Nadu!!
Visiting 8 times in four months only.. What affection does Prime Minister Modi have for Tamil Nadu!!

நான்கு மாதங்களில் மட்டும் 8 முறை வருகை.. அப்படி தமிழகம் மீது பிரதமர் மோடிக்கு என்ன பாசம்!!

நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என்று சொல்லக்கூடிய மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் கடந்த 19ஆம் தேதி நடந்து முடிந்துள்ளது. இதற்கு முன்பு வரை தமிழகம் மீது மத்தியில் ஆளும் அரசுக்கு இல்லாத அக்கறை இந்த முறை அதிகமாக இருந்ததுதான் மக்களுக்கு ஆச்சரியமாக உள்ளது.

ஏனேனில் நம் நாடு சுதந்திரம் பெற்றது முதல் இப்போது வரை எந்தவொரு பிரதமரும் தமிழகத்திற்கு அதிகம் வந்ததில்லை. ஆனால் இந்த தொடங்கி வெறும் 4 மாதங்கள் மட்டும் கடந்துள்ள நிலையில், பிரதமர் மோடி இந்த ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு சுமார் 8 முறை விசிட் அடித்து விட்டார். இதுவரை எந்த ஒரு பிரதமரும் இத்தனை முறை தமிழகத்திற்கு வந்தது கிடையாது.

அதன்படி கடந்த ஜனவரி 1ஆம் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்த ஆண்டு முதன் முறையாக பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தார். அதனை தொடர்ந்து அதே மாதம் 19ஆம் தேதி அரசு விளையாட்டுத்துறை சார்பில் நடந்த கேலோ இந்தியா விளையாட்டு நிகழ்ச்சிகளின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக 2வது முறையாக தமிழகத்திற்கு வருகை தந்தார்.

பின்னர் பிப்ரவரி 26 ஆம் தேதி 2 நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி திருப்பூரில் நடைபெற்ற என் மண் என் மக்கள் யாத்திரையில் பங்கேற்றார். அது முடிந்த உடனே பிப்ரவரி 28ஆம் தேதி தூத்துக்குடி வந்த அவர் 17,300 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதனை தொடர்ந்து மார்ச் 16ஆம் தேதி கோவையில் நடந்த ரோடு ஷோவில் பங்கேற்றார்.

தொடர்ந்து தேர்தல் பிரச்சாரம் என அடுத்தடுத்து தமிழகம் வந்த மோடி இதுவரை 8 முறை தமிழகத்திற்கு வந்துள்ளார். இதற்கெல்லாம் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு சட்டமன்றத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்பது மட்டும் தான். அதற்கான அட்சாரம் தான் மோடியின் வருகை. அவர்களின் கனவு பலிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Previous articleமாணிக்கம் தாகூர் தகுதி நீக்க வழக்கு.. தேர்தல் ஆணையம் கூறிய பதிலால் பரபரப்பு!!
Next articleரூ.5 லட்சம் ரூபாய்க்கான பிரதமரின் இலவச மருத்துவ காப்பீடு அட்டையை பெறுவது எப்படி?