தொடர்ந்து 5 நாட்களாக வெளியேறும் எரிமலை குழம்பு! மக்களின் பாதுகாப்புக்கு அச்சம்!
ஸ்பெயின் நாட்டில் வட வடமேற்கு ஆப்பிரிக்க கரையை ஒட்டி அமைந்துள்ள கனரி தீவுகளில் லா பால்மா எரிமலை அமைந்துள்ளது. சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 4.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த எரிமலை வெடித்தும் சிதறியது. அந்த வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட கரும் புகையானது சில கிலோ மீட்டர் தூரம் வரை பரவியது.
அதன் பின்னர் அந்த எரிமலையில் இருந்து தொடர்ச்சியாக நெருப்புக் குழம்பும் வெளியாகி வருகிறது. அதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுப்புறங்களில் உள்ள மக்கள் அனைவரும் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு பாதுகாப்பிற்கு ராணுவத்தினரை அழைத்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக எரிமலை வெடித்துள்ளது.
அங்கு மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டதன் காரணமாக அங்கு உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இதுவரை 190 வீடுகள் சேதம் அடைந்துள்ளது. அங்கிருந்து சுமார் 6000 மக்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் எரிமலையில் இருந்து வெளியாகும் நெருப்புக் குழம்பு அட்லாண்டிக் பெருங்கடலை நோக்கி செல்லும் நிலையில், இந்த எரிமலைக்குழம்பு கடலில் கலக்கும்போது ஆபத்தான சில விஷ வாயுக்கள் வெளியேறலாம் எனவும் புவியியல் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கை நம்மை எப்படி எல்லாம் துன்புறுத்துகிறது பாருங்கள். நாம் செய்ததை திருப்பி நமக்கே பரிசளிக்கிறது. முடிந்தவரை இயற்கையை பாதுகாப்போம்.