ஸ்பெயினில் வெடித்த எரிமலை! கடலில் கலந்த திரவம்! எழுந்த புகைமண்டலம்!

0
180
Volcano erupts in Spain! Liquid mixed in the sea! Awakened smoke!

ஸ்பெயினில் வெடித்த எரிமலை! கடலில் கலந்த திரவம்! எழுந்த புகைமண்டலம்!

ஸ்பெயின் நாட்டில் உள்ள கனரி தீவுகளில் ஒன்றான லா பல்மா என்ற தீவில் உள்ள ஹம்ரி விஜா என்ற எரிமலையில் கடந்த 19 ம் தேதி திடீரென சீற்றம் ஏற்பட்டது. அதற்கு முன்பு அங்கு நிலநடுக்கம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து தான் எரிமலை சீற்றம் ஆரம்பித்தது.

அதன் காரணமாக வெடித்து சிதற வாய்ப்பு உள்ளது என அறிந்த அரசு மக்களை பாதுகாப்பான வேறு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்தது. அங்கு இதுவரை 6000 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அந்த மலையிலிருந்து எரிமலைக் குழம்பும் வெளியேற தொடங்கியதன் காரணமாக, அந்த பகுதியில் இருந்த வீடுகளில் இருந்த அனைவருமே வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

மேலும் ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினர் என்று பல்வேறு தரப்பினரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். எரிமலைக்குழம்பு தற்போது குடியிருப்புப் பகுதிகளையும் எட்டியுள்ளது. அந்த பாதையில் இருந்த சுமார் 600 வீடுகள் இதுவரை தீக்கிரையாக்கி உள்ளன. மேலும் அந்த எரிமலை குழம்பு 258 எக்டர் நிலப்பரப்பில் பரவியுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 9 நாட்களாக எரிமலையில் இருந்து வெளிவந்த எரிமலைக்குழம்பு ஒன்பது நாட்களுக்குப் பின்னர் நேற்று கடலில் கலந்தது. இந்த எரிமலை குழம்பு கடலில் கலப்பதால் விஷத்தன்மையுள்ள வாயுக்கள் பல வெளியேறும் என்று அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்த நிலையில், தற்போது அந்த எரிமலை குழம்புகள், கடலில் கலக்க ஆரம்பித்து உள்ளது.

அதன் காரணமாக அந்த பகுதியே கரும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. உலக அழிவின் ஒரு பகுதியாக கூட நாம் இதை கருத்தில் கொள்ளலாம். எதெல்லாம் நடக்கக் கூடாது என்று அறிவியலாளர்கள் சொல்கிறார்களோ? அவையெல்லாம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மாறி மாறி ஏதோ ஒரு இயற்கை பேரழிவு நம்மை ஆட்கொள்கிறது.

Previous articleமீட்பு குழுவில் திடீரென இணைந்த நபர்! தன்னை தானே தேடிய வினோதம்!
Next articleஎரிமலையாய் கொதித்துக் கொண்டிருக்கும் இரு துருவங்களுக்கு இடையே ஒரு பூங்கொத்து!