கள்ளக்காதலை தட்டி கேட்ட சகோதரனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு! சகோதரிகள் அதிரடி கைது!

Photo of author

By Sakthi

கள்ளக்காதலை தட்டி கேட்ட சகோதரனுக்கு சரமாரி அரிவாள் வெட்டு! சகோதரிகள் அதிரடி கைது!

Sakthi

திண்டுக்கல் மாவட்டம் குடைப்பாரைப்பட்டிப்பகுதியைச் சார்ந்த சூர்யா என்ற இளைஞர் இரவில் உறங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு கும்பல் வீட்டினுள் புகுந்து அந்த உறங்கிக் கொண்டிருந்த இளைஞரை அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்டவைகளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடியது.

ரத்த வெள்ளத்தில் மிதந்த நிலையில் சத்தம் போட்ட அவரை அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் இந்த சம்பவம் சென்ற 25 ஆம் தேதி நடைபெற்றதாக தெரிகிறது.

அதோடு புகாரினடிப்படையில் சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் அந்த பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளினடிப்படையில் விசாரணையை நடத்தி வந்தார்கள்.

இந்த சூழ்நிலையில், சந்தேகத்தினடிப்படையில் அதே பகுதியை சேர்ந்த சர்தார் மற்றும் அவருடைய சகோதரர் யோகராஜ், கௌதம், ரியாஸ், உள்ளிட்டோரை காவல்துறையினர் விசாரணை செய்தனர்.

இவர்கள் 4 பேரிடமும் விசாரணை செய்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. காவல்துறையிடம் சிக்கிய அந்த 4 பேர் தான் சூர்யாவை வீடுபுகுந்து தாக்கியவர்கள் என்று தெரியவந்தது. அதோடு சாராருக்கும் சூர்யாவின் பெரியம்மா மகளுக்கும் ஏற்கனவே திருமணமான 30 வயதான மனிஷாவிற்கும் காதல் உண்டாகியிருக்கிறது.

மனிஷா திருமணமாகி கணவர் உயிரிழந்த சூழ்நிலையில், தன்னை விட 5 வயது சிறியவரான சர்தாருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இதனை கவனித்துக்கொண்டிருந்த சூர்யா தன்னுடைய சகோதரியான மனிஷாவை கண்டித்திருக்கிறார். ஆனால் மனிஷாவால் தன்னுடைய காதலை கைவிட முடியவில்லை.

சகோதரன் சூர்யா தன்னை மிரட்டியதையும், அவன் உயிருடன் இருக்கும் வரையில் நாம் ஒன்று சேர முடியாது என்றும், மனிஷா தன்னுடைய காதலன் சர்தாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை சூர்யாவை தீர்த்துக்கட்ட முடிவு செய்த சர்தார் தன்னுடைய நண்பர்கள் கௌதம், யோகராஜ் மற்றும் ரியாஸ் உள்ளிட்டோருடன் சேர்ந்து வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த சூரியாவை தாக்கியது விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

இப்படியான நிலையில்தான் இத்திட்டத்திற்கு உதவி புரிந்த மனிஷா மற்றும் அவருடைய சகோதரி சீமாதேவி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்வதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார்கள்.

ஆனால் தான் விஷம் குடித்து விட்டதாக நாடகமாடிய அவர், சென்னை பாஜக பிரமுகர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகவும் அழுது புலம்பியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் மனிஷாவை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் மனிஷா விஷம் குடிக்காமல் நாடகமாடியது தெரியவந்தது.

மருத்துவமனையில் வைத்தே மனிஷா மற்றும் சீமா தேவி உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர் அதோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்கள் இருவரையும் சிறையிலடைத்தனர்.