வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிப்பு! வரைவு வாக்காளர் பட்டியல் 3 மாதத்தில் வெளியீடு!

0
213

வாக்காளர் இறுதிப் பட்டியல் வெளியிடும் தேதி அறிவிப்பு! வரைவு வாக்காளர் பட்டியல் 3 மாதத்தில் வெளியீடு!

தமிழகத்தில் வருகின்ற 2021ல் சட்டமன்ற தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில்,தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.அதிமுகவைப் பொறுத்தவரையில் முதல்வர் வேட்பாளராக யார் நிற்பது என்ற குழப்பங்கள்  நிலவி வருகின்றன.திமுகவை பொறுத்தவரையில் எந்தவித குழப்பமும் இல்லாமல் அவர்கள் தங்களது கட்சி வேலைகளை தீவிரமாக பார்த்து வருகின்றனர்.அதிமுகவில் இந்த குழப்பங்கள் நிலவி வரும் நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் கூட்ட அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இந்த குழப்பங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தனர்.

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்காளர் இறுதிப்பட்டியல் வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வருகின்ற நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ம் தேதி வரை,வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும்,குறிப்பிட்ட தேதிக்குள் பெயர் சேர்ப்பு,பெயர் நீக்குதல் உள்ளிட்ட திருத்தங்களை செய்து கொள்ளலாம் என்றும் தேர்வாணையம் கூறியுள்ளது. www.nvsp.in என்ற இணையதள முகவரியில் பெயர் சேர்ப்பு மற்றும் பெயர் நீக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Previous articleடிசம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவடையும்
Next articleமனித தலையைத் தின்ற இளைஞர் மற்றும் இளம்பெண்! ஆந்திராவில் அதிர்ச்சித் தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here