உதடுகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா? அப்போ சர்க்கரையுடன் இதை கலந்து யூஸ் பண்ணுங்க!
நம்முடைய உதடுகள் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க சர்க்கரையை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
பொதுவாக பெண்கள் அனைவரும் சருமத்திற்கும் சரி உதடுகளுக்கும் சரி. கெமிக்கல் நிறைந்த மேக்கப் பொருட்கள், லிப்ஸ்டிக் ஆகியவற்றை வாங்கி பயன்படுத்துவார்கள். இதன் பின்விளைவு பயன்படுத்தும் பொழுது யாருக்கும் தெரிவது இல்லை. நாட்கள் செல்ல செல்ல இதனுடைய பாதிப்புகள் இருக்கும்.
கெமிக்கல் நிறைந்த அழகு சாதன பொருட்களை பயன்படுத்தும் பொழுது சருமத்திற்கு ஒவ்வாமை பிரச்சனை ஏற்படும். அதே போல உதடுகளுக்கு லிப்ஸ்டிக் அதிகமாக பயன்படுத்தும் பொழுது உதடுகளின் மேல் உள்ள தோல் உறியத் தொடங்கும். இதை தடுக்க தற்பொழுது சர்க்கரையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* சர்க்கரை
* தேன்
* எலுமிச்சை
செய்முறை:
ஒரு சிறிய பௌல் ஒன்றை எடுத்துக் கொண்டு அதில் சர்க்கரை சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தேன் சிறிதளவும் எலுமிச்சை சாறு சிறிதளவும் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
சர்க்கரை மணல் போல ஆகும் வரை கலந்தால் போதும். சர்க்கரை வந்து மணல் போல ஆன பின்பு சர்க்கரையை எடுத்து உதடுகளில் தேய்க்க வேண்டும். அதன் பின்னர் வலமிருந்து இடமாகவும் இடமிருந்து வலது பக்கமாகவும் மசாஜ் செய்ய வேண்டும்.
இந்த மசாஜ்ஜை இரண்டு நிமிடங்கள் செய்ய வேண்டும். இரண்டு நிமிடங்கள் முடிந்த பின்னர் உதடுகளை தண்ணீரால் கழுவிக் கொள்ளலாம். இதை தொடர்ந்து ஒரு வாரம் செய்து வந்தால் உதடுகள் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.