முகத்தை இயற்கையான முறையில் பொலிவாக மாற்ற வேண்டுமா? திராட்சையை இப்படி யூஸ் பண்ணுங்க!
நம்முடைய முகத்தை இயற்கையாக எந்தவித கெமிக்கலும் இல்லாமல் அழகாக பெலிவாக மாற்றுவதற்கு திராட்சையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
திராட்சை பழங்களை நாம் சாப்பிட்டாலே சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கும். திராட்சையில் உள்ள ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் தான் சருமத்திற்கு பல நன்மைகளை தாராளமாக தருகின்றது. திராட்சை நம்முடைய சருமத்தை புத்துணர்ச்சி பெற வைக்கும். சருமத்திற்கு தேவையான வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியச் சத்துக்கள் திராட்சையில் இருக்கின்றது. இந்த திராட்சையை நம்முடைய முகத்தை பொலிவாக மாற்றுவதற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* திராட்சை
* தயிர்
* எலுமிச்சை
செய்முறை:
முதலில் மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் திராட்சையை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் திராட்சையை கூழ் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அரைத்து வைத்துள்ள திராட்சை கூழில் ஒரு தேக்கரண்டி அளவு தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதை நன்றாக கலந்து கொண்டு இதில் எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
இந்த கலவையை நம்முடைய முகம் மற்றும் கழுத்துப் பகுதியை சுற்றி தேய்த்துக் கொள்ள வேண்டும். 20 நிமிடங்கள் கழிந்து இதை கழுவ வேண்டும். இவ்வாறு இதை வாரம் 2 முதல் 3 முறை செய்து வந்தால் முகம் பொலிவாக மாறும்.