நம்முடைய சரும அழகை அதிகரிக்க வேண்டுமா? இந்த இரண்டு பொருட்கள் போதும்! 

Photo of author

By Sakthi

நம்முடைய சரும அழகை அதிகரிக்க வேண்டுமா? இந்த இரண்டு பொருட்கள் போதும்!
நம்முடைய சருமத்தின் அழகை அதிகரித்து மேலும் சருமம் தொடர்பான பாதிப்புகளை குணப்படுத்த உதவி செய்யும் முக்கியமான மருத்துவ முறையை செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பெண்கள் அனைவருக்கும் இருக்கும் ஆசை சருமம் எப்பொழுதும் பொலிவுடன் இருக்க வேண்டும் என்பதும் சருமத்தில் எந்தவித பருக்களோ அல்லது சுருக்கமோ இல்லாமல் இளமையுடன் இருக்க வேண்டும் என்பதுதான்.
அவ்வாறு சருமத்தை பாதுகாக்க மட்டும் பெண்கள் அதிக பணத்தை செலவிடுகிறார்கள். சருமத்தில் கரும்புள்ளிகள், சுருக்கங்கள், பருக்கள், கண்களை சுற்றி கருவளையம் என்று எதாவது முகத்தில் தோன்றினால் உடனே அதை குணப்படுத்த பல வகையான கிரீம்களை முகத்தில் தேய்ப்பார்கள். ஆனால் இது நாளடைவில் கிருமியாக மாறி சருமத்திற்கு மேலும் பாதிப்புகளை கொடுக்கும்.
எனவே இந்த பதிவில் கூறப்பட்டிருக்கும் இந்த மருத்துவ முறையை பின்பற்றுவதன் மூலமாக சருமத்தின் அழகை அதிகரிக்க முடியும். மேலும் முகத்தில் தோன்றும் முகப்பருக்களை அழிக்க முடியும். முகத்தில் சுருக்கங்கள் இருந்தாலும் அது மறைந்து எப்பொழுதும் சருமம் இளமையான தோற்றத்துடன் காணப்படும். இதை எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* ஆரஞ்சுப் பழத் தோல்
* தயிர்
செய்முறை:
ஆரஞ்சுப் பழத் தோல்களை எடுத்து வெயிலில் உலர்த்தி அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சிறிய பவுல் எடுத்து அதில் அரைத்து வைத்துள்ள ஆரஞ்சுப் பழத் தோலின் பொடியை சேர்க்க வேண்டும். இத்துடன் தயிர் சிறிதளவு சேர்த்து நன்கு கலக்கி பேஸ்ட் பதத்திற்கு கொண்டு வரவும்.
பின்னர் இதை எடுத்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் முகத்தை நன்றாக காய வைக்க வேண்டும். நன்றாக காய்ந்த பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வாரத்திற்கு மூன்று முறை இதை செய்யலாம்.