கல்யாணம் செய்யனுமா? அப்போ கன்னித்தன்மையை பரிசோதிக்க வேண்டுமென கூறி என்ஜீனியருக்கு தொல்லை!
முதலில் எல்லாம் வரதட்சணை கொடுமை என்றால் பணம் மற்றும் நகை மட்டுமே கேட்பார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் மாமியார் வீட்டுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கும்படி கேட்பார்கள். ஆனால் தற்போது புதிது புதிதாக வரதட்சணை கேட்க ஆரம்பித்துள்ளனர். ஒரு பெண் அவர்கள் வீட்டிலும் உள்ளது என்பதை அவர்கள் எப்போது புரிந்து கொள்வார்கள்.
வளர்ச்சி அடைந்த, நாகரீகமான சமுதாயத்தில் இருக்கிறோம் என்பதைக் கூட சிலர் வரதட்சணை காரணமாகவும், பேராசையின் காரணமாகவும் மறந்து விடுகின்றனர். தற்போது அது போல் பெங்களூர் அருகே அமைந்த அனுமந்த நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஒரு பகுதியில் ஒரு இளம்பெண் வசித்து வருகிறார். 29 வயதான அந்த பெண் சாப்ட்வேர் என்ஜினியராக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
அந்த இளம் பெண்ணுக்கும், ஞானபாரதி பகுதியை சேர்ந்த தீபக் என்பவருக்கும் கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த புதிதில் இருவரும் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தனர். நாளடைவில் அதுவும் கடந்த சில மாதங்களாக தீபக் அந்த பெண்ணிடம் அதாவது தனது மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண்ணோ வரதட்சனை வாங்கி வர மறுத்துவிட்டார்.
ஆனாலும் வரதட்சணைக்காக அந்தப் பெண்ணை அவரது வீட்டில் கணவர், மாமனார், கொழுந்தனார் மற்றும் நாத்தனார் ஆகியோர் மற்றும் தீபக்கின் அத்தை ஆகியோரும் சேர்ந்து கொடுமை படுத்தி வந்துள்ளனர். மேலும் தீபக்கும், அவரது தங்கை ஹேமாவும் பெண்ணின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாக கூறி மருத்துவமனையிலிருந்து கன்னித்தன்மை பரிசோதனை அறிக்கை கொண்டு வந்து தர வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இதை தொடர்ந்து தொல்லை கொடுத்ததாகவும் சொல்கிறார் அந்தப் பெண். அதிலும் கொடுமை என்னவென்றால் கணவனின் தந்தை அந்த பெண்ணிடம் தன்னுடைய ஆசைக்கும் இணங்க வேண்டும் என்றும் கூறி வற்புறுத்தி வந்துள்ளார். ஒரு பெண் எவ்வளவு கஷ்டங்களை தான் தாங்கிக் கொள்வார். கணவன் வேண்டும் என்பதற்காக? இதைப்பற்றி எல்லாம் தீபக்கிடம் அந்த பெண் கூறும் போது, கணவன் கூறியதை கேட்டு அதிர்ந்து போனார்.
தீபக் மனைவியிடம் என் தந்தையுடன் மட்டுமல்ல, எனது நண்பன் உடனும் படுக்கையை பகிர வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளான். இதனால் அந்த பெண்ணின் மனம் சுக்குநூறாக உடைந்து போனது. அதன் காரணமாக மாமியார் வீட்டில் அவர்கள் 5 பேர் மீதும் அனுமந்த நகர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தற்போது தலைமறைவாக உள்ள அவர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.