விரைவில் முகக் கருமை மறைந்து வெண்மையாக மாற வேண்டுமா!! இது உங்களுக்காக!!

Photo of author

By Selvarani

விரைவில் முகக் கருமை மறைந்து வெண்மையாக மாற வேண்டுமா!! இது உங்களுக்காக!!

கருமையை போக்க பல க்ரீம்கள் மற்றும் இராசாயனப்பொருட்களை தான் முகத்தில் தடவ வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமது வீட்டில் எளிதில் கிடைக்கும் சில பொருட்களை கொண்டு முகத்தில் பொழிவை அதிகரிக்க செய்யலாம். அதை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. அரிசி
2. பச்சை பயிறு
3. பன்னீர் ரோஸ்
4. கற்றாழை சாறு

செய்முறை:

அரிசி மற்றும் பச்சை பயிரை முதல் நாள் இரவு ஊற வைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதனை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து ஒரு மிக்ஸி ஜாரில் தண்ணீர் விட்டு பன்னீர் ரோசையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இதனை சுத்தமாக வடிகட்டி கொள்ளுங்கள்.

வடிகட்டியை கலவையை ஒரு பாத்திரத்தில் சேர்த்து மிதமான சூட்டில் கைவிடாமல் கிளறி விடவும். இல்லையென்றால் கட்டி விழுந்து விடும். இக்கலவை கிரீம் பதத்திற்கு வரும் வரை கலந்து விட்டு அடுப்பில் இருந்து கீழே இறக்கி விடுங்கள். பின்னர் இது ஆறும் வரை நன்றாக கலக்கி கொண்டே இருக்க வேண்டும். இதனுடன் கற்றாழை ஜெல் 2 ஸ்பூன் எடுத்துக் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு இதனை கலக்கும் பொழுது கிரீம் பதத்திற்கு வரும். இதனை தினமும் முகத்தில் பயன்படுத்தி வருகையில் முகம் கருமை மறைந்து வெண்மையாக மாறிவிடும்.