நீங்களும் ஹீரோயின் போல முகத்தை பளபளப்பாக வைக்க வேண்டுமா? இந்த ஜூஸ்களை குடிங்க! 

Photo of author

By Sakthi

நீங்களும் ஹீரோயின் போல முகத்தை பளபளப்பாக வைக்க வேண்டுமா? இந்த ஜூஸ்களை குடிங்க!
பெண்கள் அனைவரும் தங்களுடைய உடல் நலத்தில் கவனம் செலுத்துவதை விட முகத்தின் அழகிற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். முகம் பளபளப்பாகவும் பருக்கள் இல்லாமலும் சுருக்கங்கள் இல்லாமலும் கருவளையம் கரும்புள்ளிகள் ஆகியவை இல்லாமலும் இருக்க தனித் தனியாக பணத்தை செலவு செய்கிறார்கள்.
இவை அனைத்திற்கும் தனித் தனியாக பேஷ் பேக் கிரீம்கள், பேஷ் வாஷ் மேலும் பல அழகு சாதனப் பொருட்களை வாங்குகிறார்கள். இவை அனைத்தையும் பயன்படுத்தி தங்களின் சருமத்திற்கு செயற்கை அழகை வழங்குகிறார்கள்.
இந்த பதிவில் முகத்திற்கு இயற்கையாக பளபளக்கும் தன்மையை வழங்கும் சில ஜூஸ் வகைகளை பற்றி பார்க்கலாம். இந்த ஜூஸ்களை குடித்தாலே சருமம் பளபளப்புத் தன்மையை அடையும். அது என்னென்ன ஜூஸ் என்று தற்பொழுது பார்க்கலாம்.
முகத்தை பளபளப்பாக மாற்றுதவும் ஜூஸ் வகைகள்!
* கேரட் ஜூஸ்
* பீட்ரூட் ஜூஸ்
* கேல் ஜூஸ்
* வெள்ளரிச் ஜூஸ்
* தக்காளி ஜூஸ்
* கீரை ஜூஸ்
* செலரி ஜூஸ்
கேரட் ஜூஸ்:
சருமத்திற்கு அனைத்து வகையான நன்மைகளையும் தரக்கூடிய காய்கறிகளில் கேரட்டும் ஒன்று. கேரட்டை பச்சையாகவும் சாப்பிடலாம். கேரட்டை ஜூஸ் செய்தும் குடிக்கலாம். கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கின்றது. இந்த பீட்ட கரோட்டின் வைட்டமின் ஏ சத்தாக மாற்றப்பட்டு சருமத்திற்கு இன்றியமையாத ஊட்டச்சத்தாக வழங்கப்படுகின்றது.
பீட்ரூட் ஜூஸ்:
பீட்ரூட்டும் கேரட்டைப் போலத்தான். பீட்ரூட் சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கின்றது. பீட்ரூட்டில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது. இதனால் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கின்றது. மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தி சருமத்தை பளபளப்பாக மாற்றுகின்றது.
கேல் ஜூஸ்:
கேல் என்பது தமிழில் பரட்டைக் கீரை என்று அழைக்கப்படுகிறது. இந்த பரட்டைக் கீரை ஐரோப்பா கண்டத்தை பூர்வீகமாக கொண்டது. இந்த கேல் கீரையில் விட்டமின் ஏ, விட்டமின் கே, விட்டமின் சி, ஆன்டிஆக்சிடன்ட் ஆகியச் சத்துக்கள் இருக்கின்றது. இந்த கேல் கீரையை ஜூஸ் செய்து குடிப்பதால் சருமம் பளபளப்பாக மாறும். மேலும் முகத்தில் உள்ள கருவளையங்கள் மறையும்.
வெள்ளரி ஜூஸ்:
சருமத்திற்கு நன்மைகள் தரக்கூடிய பொருட்களில் வெள்ளரியும் ஒன்று. இந்த வெள்ளரியை பச்சையாகவும் சாப்பிடலாம். இந்த வெள்ளரியில் நீர்ச்சத்துக்கள் அதிகம் இருக்கின்றது. இதனால் சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ள உதவுகின்றது. மேலும் சருமத்தில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவுகின்றது.
தக்காளி ஜூஸ்:
தக்காளியை பச்சையாக சாப்பிட்டாலும் சரி. அல்லது ஜூஸ் செய்து குடித்தாலும் சரி. அதுவும் இல்லையென்றால் தக்காளியை வெட்டி முகத்தில் தேய்த்தாலும் சரி சருமம் ஆரோக்கியமாக இருக்கும். தக்காளியில் லைகோபீன் உள்ளது. இது சூரியனில் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. தக்காளியில் இருக்கும் வைட்டமின் ஏ, வைட்டமின் சி சத்துக்கள் சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவி செய்கின்றது.
கீரை ஜூஸ்:
கீரையை ஜூஸ் செய்து குடித்து வந்தால் சருமத்திற்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் சருமத்தை பளபளப்பாக மாற்றவும் கீரையில் உள்ள வைட்டமின்கள் உதவுகின்றது.
செலரி ஜூஸ்:
செலரி ஜூஸ் சருமத்தை பளபளப்பாக மாற்றுவதிலும் சருமத்திற்கு ஆரோக்கியத்தை வழங்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. செலரியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் கே ஆகியச் சத்துக்கள் இருக்கின்றது. இதனால் சருமத்தை ஆரோக்கியமாகவும், ஈரப்பதத்தை சமநிலையில் வைத்துக் கொள்ளவும் உதவுகின்றது.