சருமத்தை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? மூன்று வழிகளில் தேனை இப்படி பயன்படுத்துங்க! 

Photo of author

By Sakthi

சருமத்தை பளபளப்பாக மாற்ற வேண்டுமா? மூன்று வழிகளில் தேனை இப்படி பயன்படுத்துங்க!
நம்முடைய சருமத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு தேனை பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தேன் நம்முடைய உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றது. தேனில் உடலுக்குத் தேவையான விட்டமின்கள் சத்துக்கள் இருக்கின்றது. மேலும் பல வகையான ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது. உடலுக்கு எவ்வாறு நன்மைகளை தருகின்றதோ அதே போல சருமத்திற்கும் பல வகையான நன்மைகளை தருகின்றது. இந்த தேனை சருமத்திற்கு எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
முதல் வழிமுறை…
தேவையான பொருட்கள்…
* தேன்
* எலுமிச்சை சாறு
செய்முறை…
ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதில் தேன் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து முகத்தில் தேய்க்க வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழிந்து முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் முகம் பளபளப்பாக மாறும்.
இரண்டாவது வழிமுறை…
தேவையான பொருட்கள்…
* தேன்
* மஞ்சள்
* தயிர்
செய்முறை…
ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் மஞ்சள் தூள் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதில் தேன் சேர்த்து நன்கு கலந்துவிட்டு முகத்தில் தேய்க்க வேண்டும். மசாஜ் செய்து பின்னர் முகத்தை கழுவினால் போதும். முகம் பளபளப்பாக மாறும்.
மூன்றாவது வழிமுறை…
தேவையான பொருட்கள்…
* தேன்
* தயிர்
செய்முறை…
ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். பின்னர் இதில் தயிர் சிறிதளவு சேர்க்க வேண்டும். பின்னர் இதில் தேன் சிறிதளவு சேர்த்து நன்கு கலந்துவிட்டுக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை முகத்தில் தேய்க்க வேண்டும். மசாஜ் செய்து முகத்தை கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.