முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா? அப்போ ஆரஞ்சு பழத் தோலை இப்படி பயன்படுத்துங்க! 

Photo of author

By Sakthi

முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய வேண்டுமா? அப்போ ஆரஞ்சு பழத் தோலை இப்படி பயன்படுத்துங்கள்!

நம்முடைய முகத்தில் உள்ள சுருக்கங்களை மறையச் செய்ய ஆரஞ்சுப் பழத் தலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.

நம்மில் சிலருக்கு இளமையிலேயே சத்து குறைபாடு காரணமாங சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படத் தொடங்கும். அந்த சுருக்கங்களை நாம் சாப்பிட்டு விட்டு தூக்கி எறியக் கூடிய ஆரஞ்சு பழத்தின் தலை வைத்து சரி செய்யலாம்.ஆம் ஆரஞ்சு பழத் தோலுடன் வெறும் ஒரே ஒரு பொருளை சேர்த்து நம்முடைய முகத்தில் உள்ள சுருக்கங்கள் அனைத்தையும் மறையச் செய்யலாம். அது எவ்வாறு என்பது குறித்து பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

* ஆரஞ்சுப் பழத் தோல்

* தயிர்

செய்முறை:

முதலில் ஆரஞ்சுப் பழத் தோலை வெயிலில் காய வைக்க வேண்டும். பின்னர் இதை அரைத்து பொடியாக மாற்றிக் கொள்ளை வேண்டும்.

பின்னர் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு அதில் ஒன்று அல்லது ஒன்றரை ஸ்பூன் ஆரஞ்சு பழத் தோலின் பொடியை சேர்த்துக் கொள்ளை வேண்டும்.இந்த பொடியுடன் தயிர் சேர்த்து நன்றாக குழைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக இந்த கலவையை முகம் முழுவதும் தேய்க்க வேண்டும். இந்த கலவை நன்றாக காய்ந்த பின்னர் முகத்தை கழுவி விடலாம்.இதனால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறைவதோடு முகத்தின் நிறமும் மாறத் தொடங்கும்.