உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா? அதற்கு புதினா மற்றும் துளசி போதும்!

Photo of author

By Sakthi

உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா? அதற்கு புதினா மற்றும் துளசி போதும்!
பொலிவு இழந்து இருக்கும் நம்முடைய முகத்தை துளசி மற்றும் புதினாவை வைத்து எவ்வாறு பொலிவு பெற வைப்பது என்பது குறித்து இந்த பதிவின். மூலம் தெரிந்து கொள்ளலாம்.
நம்மில் ஒரு சிலருக்கு முகம் எண்ணெய் வழிந்து கொண்டு பொலிவு இல்லாமல் பளபளப்பு தன்மை இல்லாமல் வறண்ட சருமமாக இருக்கும். இத்தனை பிரச்சனையும் சரி செய்ய நாம் பல சிகிச்சை முறைகளை எடுத்து வருகிறோம். மேலும் பலவிதமான கிரீம்களையும் முகத்தில் பூசி வருகிறோம். இதனால் சருமம் வேகமாக நன்மை பெற்று அதன் பின்னர் மெதுவாக ஒவ்வொரு தீமைகளை சந்திக்கும்.
ஒரு சிலர் முகம் பொலிவு பெற வேண்டும் என்று கண்ட மருந்துகளையும் வாங்கி முகத்தில் தேய்த்து வருவார்கள். அது பிற்காலத்தில் சருமத்திற்கு கேடு விளைவிக்கும். அவ்வாறு கேடு விளைவிக்கும் பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை தந்துள்ள துளசி மற்றும் புதினாவை முகத்திற்கு பயன்படுத்தலாம். இதை பயன்படுத்தும் பொழுது சருமம் இயற்கையாக பொலிவு பொறும். மேலும் சருமத்தில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும். அதை எவ்வாறு செய்வது என்பது குறித்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்…
* துளசி
* புதினா
செய்முறை…
துளசி இலைகள் சிலவற்றை எடுத்து அதை இடித்து அதில் இருந்து சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும். அதே போல புதினா இலைகளை எடுத்து அதை இடித்து அதிலிருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து புதினா சாறையும் துளசி சாறையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த கலவையை முகத்தில் தேய்த்து 10 நிமிடம் வரை ஊற வைக்க வேண்டும். 10 நிமிடம் கழிந்த பின்னர் முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் முகம் இயற்கையாகவே பொலிவு பெறும்.