உங்களுடைய சருமம் சூப்பராக இருக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகள் சாப்பிடுங்க! 

Photo of author

By Sakthi

உங்களுடைய சருமம் சூப்பராக இருக்க வேண்டுமா? அப்போ இந்த உணவுகள் சாப்பிடுங்க!
நாம் அனைவரும் நம்முடைய உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வருகின்றோம். உடற்பயிற்சி செய்வது, ஆரோக்கியமான. உணவுகள் சாப்பிடுவது, யோகாசனங்கள் என்று பல ஆரோக்கியமான நடைமுறைகளை நாம் பின்பற்றி வருகின்றோம்.
ஆனால் சருமத்திற்கு இவை அனைத்தும் நன்மை கொடுக்குமா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாம் உடல் நலத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்கிறோமே தவிர சருமத்திற்கு தேவையான விஷயங்களை செய்ய.மறந்து விடுகிறோம்.
சருமத்திற்கும் ஒரு சில யோகாசனங்கள் இருக்கின்றது. பயிற்சிகள் இருக்கின்றது. சருமத்திற்கு பலன் தருவதற்காக தனியாக உணவுகள் இருக்கின்றது. ஆனால் அதையெல்லாம் நாம் பின்பற்றாமல் சருமம் பளபளப்பாக இருக்க சருமத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் இருக்க செயற்கையான வழிமுறைகளை பின்பற்றுகிறோம்.
இவை மேலும் நம்முடைய சருமத்திற்கு பிரச்சனைகளை தரும். எனவே நம்முடைய சருமத்திற்கு எந்த விதமான பிரச்சனையும் தராமல் சருமத்தை பாதுகாக்கும் உணவுகள் குறித்து தற்பொழுது பார்க்கலாம்.
சருமம் பாதுகாப்பாக சூப்பராக இருக்க உதவும் உணவு வகைகள்:
* நம்முடைய சருமத்தை பாதுகாக்க நாம் டார்க் சாக்லெட் சாப்பிடலாம். டார்க் சாக்லெட் நம்முடைய சருமத்தை சூரிய. ஒளியில் இருந்து வரும் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்.
* சருமம் எப்பொழுதும் பாதுகாப்பாகவும், எந்தவித நோய்த் தொற்றுகள் அண்டாமலும் இருக்க ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் தேவை. எனவே ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன் வகைகளை சாப்பிட வேண்டும்.
* சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள அவகேடோ பழத்தை சாப்பிடலாம். அவகேடோ பழமும் நம்முடைய சருமத்தை சூரிய ஒளியில் இருந்து ஏற்படும் சேதத்தில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும்.
* சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள சர்க்கரை வள்ளிக் கிழங்கு சாப்பிடலாம். சர்க்கரை வள்ளிக் கிழங்கு நம்முடைய சருமத்தின் செல்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள உதவி செய்யும்.
* சருமத்தின் அமைப்பை மேம்படுத்த நாம் அக்ரூட் பருப்பை சாப்பிடலாம்.
* சருமத்தை எப்பொழுதும் இளமையாக வைத்துக் கொள்ள நாம் பெர்ரி பழங்களை சாப்பிடலாம். மேலும் இவை கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவும்.
* சருமத்தில் ஏற்படும் திடீர் வீக்கங்களை குறைக்க நாம் ப்ரோக்கோலியை சாப்பிடலாம்.
* சருமத்திற்கு பலவித நன்மைகளை தரும் தக்காளியை நாம் சாப்பிட்டு வந்தால் வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவி செய்யும்.
* கீரை வகைகள் சிலவற்றை நாம் சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டு வந்தால் சருமம் பழுதடைவதில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
* சருமத்தை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள நாம் கிரீன் டீ குடிக்கலாம். கிரீன் டீ நம்முடைய சருமத்தின் நிறத்தை மேம்படுத்துகின்றது.