பாராட்டித் தள்ளிய வார்னர்…! நெகிழ்ச்சியில் சாஹா…!

Photo of author

By Sakthi

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற 47 வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதினர் இப்போட்டியில் வெற்றி பெற்றால் தான் பிளேஆப் உறுதிப்படுத்தலாம், என்ற நிலையில், களமிறங்கிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

ஹைதராபாத் அணி நிர்ணயித்த 220 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் புகுந்த டெல்லி டேர்டெவில்ஸ் அணி 136 ரன்களில் சோர்ந்து போனது .

இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது சம்பந்தமாக ஹைதராபாத் அணி கேப்டன் வார்னர் தெரிவிக்கும்போது, தொடக்க வீரராக களமிறங்கிய விருத்திமான்சஹாவின் ஆட்டம் நன்றாக இருந்ததாகவும், மிடில் ஆர்டர் வரிசையில் வில்லியம்சன் ஆடுவதற்கு தொடக்க ஆட்டக்காரர் பேர்ஸ்டோவ் நீக்கப்பட்டார். இது மிகவும் கடினமான முடிவு என்று தெரிவித்திருக்கின்றார்.