இந்த மாவட்ட மக்கள் எல்லாம் உஷாராக இருங்கள்! இன்று வெளுத்து வாங்க போகும் கனமழை!

Photo of author

By Sakthi

வடகிழக்கு பருவமழை ஆரம்பமான நாள் முதல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், தூத்துக்குடி, கன்னியாகுமரி, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அந்த நகரங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது தற்சமயம் மழை குறைந்து இருக்கிறது. இருந்தாலும் அவ்வப்போது பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது, வடகிழக்கு பருவக் காற்றின் காரணமாக, இன்றைய தினம் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில பகுதியில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 மற்றும் 16 உள்ளிட்ட தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழையும், மற்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. வரும் 17ஆம் தேதி தென்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் ஓரிரு இடங்களில், மிதமான மழை காண வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.