தமிழக மக்களுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்த சென்னை வானிலை ஆய்வு மையம்! மக்களே உஷார்!

Photo of author

By Sakthi

கடந்த 2 ,3 வருடங்களாக தமிழகத்தில் பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக, தமிழகம் முழுவதும் கடுமையான வறட்சி நிலவியது. தமிழகம் முழுவதும் விவசாயம் மிகவும் நலிவுற்ற நிலைக்கு சென்றது.இதன் காரணமாக, விவசாயிகள் தங்களுக்கு உரிய இழப்பீடு கொடுக்க வேண்டும் என்று தெரிவித்து பலகட்ட கோரிக்கைகளையும், போராட்டங்களையும், நடத்தினார்கள்.

விவசாயப் பகுதிகளில் இருக்கக்கூடிய மோட்டார்கள் மழை இல்லாத காரணத்தால் நீர் ஆதாரமின்றி செயல்படாததால் விவசாயிகள் மிகவும் கவலையுற்று இருந்தார்கள்.இந்த சூழ்நிலையில், சமீபகாலமாக தமிழகத்தில் பருவமழை நன்றாக பொழிந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

அத்தோடு கடந்த 2018 ஆம் வருடம் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசுக்கு தமிழ்நாட்டிற்கு முறையான அளவு காவிரி நீரை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன் காரணமாக, டெல்டா உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் விவசாயம் செழித்து இருக்கிறதுஇந்த சூழ்நிலையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, இன்று முதல் வரும் 13-ஆம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

தென்மேற்குப் பருவக் காற்றின் காரணமாக, இன்று முதல் வரும் 13ஆம் தேதி வரையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. 13ஆம் தேதி நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்து இருக்கிறது. அதோடு அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஒட்டியவாறு இருக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதேபோல சென்ற 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு என்னவென்றால் நீலகிரி மாவட்டத்தில் 16 சென்டி மீட்டரும், பந்தலூர் போன்ற பகுதிகளில் 8 சென்டி மீட்டரும் மேல் கூடலூர் ஐந்து சென்டி மீட்டரும், கோயம்புத்தூர் ,வால்பாறை, இப்பகுதியில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் வைத்திருக்கிறார்.

சென்னை வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த எச்சரிக்கை வங்க கடல் பகுதியில் இன்று முதல் நாளை மறுநாள் வரையில் தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதிகளில் அந்தமான் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் வாய்ப்பு இருக்கிறது என்றும் வரும் 12ம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் மத்திய மேற்கு வங்க கடல் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது.

ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். அரபிக்கடல் உள்ளிட்ட பகுதிகளில் இன்று முதல் 13-ஆம் தேதி வரையில் தெற்கு மற்றும் மேற்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆகவே மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.