டெல்டா மாவட்டங்களை பொருத்தவரையில் மேட்டூர் அணை ஒரு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது தமிழகத்தின் முக்கிய நீர் ஆதாரமாக இருக்கும் காவிரி ஆற்றில் நீர் வரவில்லை என்றால் டெல்டா மாவட்டங்கள் அனைத்தும் பரிதவித்து தான் போகும். அந்தவிதத்தில் தஞ்சை, வேதாரண்யம், கும்பகோணம், திருவையாறு, திருச்சி, உள்ளிட்ட பகுதிகளில் காவிரியாற்றின் தண்ணீர் வரவில்லை என்றால் மிகுந்த சோகத்திற்கு ஆளாகி விடுவார்கள் அந்த பகுதி மக்கள்.
குறிப்பாக டெல்டா மாவட்ட விவசாயிகள் காவிரி ஆற்றில் தண்ணீர் வரவில்லை என்றால் விவசாயம் செய்வது மிக கடினம். முன் காலத்தில் எல்லாம் டெல்டா மாவட்டங்களில் விவசாயம் நடைபெற்றால் தமிழகம் முழுவதும் உணவுப் பஞ்சங்கள் உட்பட அனைத்து விதமான பஞ்சங்களும் நீங்கும் என்பது ஐதீகம். ஆனால் தற்சமயம் காவிரி ஆற்றில் நீர் வராத காரணத்தால், அந்த விவசாயிகளை தற்கொலை முடிவுக்கு தள்ளப்படும் நிலையில் இருந்து வருகிறார்கள். இதில் காவிரி ஆற்றில் தண்ணீர் வந்தால் சேலம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயரும் அவ்வாறு மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து விட்டால் டெல்டா மாவட்ட விவசாயிகள் ஓரளவிற்கு நிம்மதி பெருமூச்சு விடுவார்கள். அந்த விதத்தில் சமீபத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தின் உத்தரவின்படி கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி நீரை கொடுப்பதற்கு சம்மதம் தெரிவித்து. நீரையும் வழங்கியது, இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தார்கள்
தற்சமயம் சரியான மழை இல்லாத காரணத்தாலும், காவிரி ஆற்றில் நீர் வரத்தை கர்நாடக அரசு குறைத்து விட்ட காரணத்தாலும், மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. அதன் படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் இரண்டாவது நாளாக இன்று காலை 66.08 அடியாக நீடித்து வருகிறது.மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 11 ஆயிரத்து 620 கன அடியாக இருந்தது,அதிலிருந்து தற்சமயம் 8 ஆயிரத்து 789 கன அடியாக குறைந்து நீடிக்கிறது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 8000 கன அடி வீதம் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
அணையின் நீர் இருப்பு தற்சமயம் 29.42 டிஎம்சி என்று சொல்லப்படுகிறது. அணைக்கு வரும் நீரின் அளவும், பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவும், சீரான அளவில் இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் இரண்டாவது நாளாக 66.08 அடியாக நீடித்து வருகின்றது.