ஒரே நாளில் உங்க தலையில் இருக்கும் பேன் எல்லாம் செத்துவிடும்.. இதை தடவுங்க போதும்..!!

Photo of author

By Priya

Lice problem in Tamil: முடி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அடர்த்தியான நீளமான கூந்தல் வளர்ப்பதில் பெண்களுக்கு எப்பொழுதும் அலாதி பிரியம் தான். ஒரு சிலர் நீளமான கூந்தலை விரும்பவில்லை என்றாலும், முடியை பாதியாக வெட்டி கொண்டு அடர்த்தியாக வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது என்னவென்று பார்த்தால் இந்த பேன் தொல்லை தான். குடும்பத்தில் ஒருவருக்கு பேன் தலையில் இருந்துவிட்டால் போதும் அனைவரின் தலையிலும் ஏறி எப்பொழுதும் தலையை அரித்துக்கொண்டே இருக்கும்.

இதனால் குழந்தைகளுக்கு படிப்பில் கவனம் இல்லாமல், வேலை செய்பவர்கள் மற்றவர்கள் முன் தலையை சொரிய முடியாமல் தவிப்பார்கள். அதிலும் தலைக்குளித்துவிட்டு ஃப்ரி ஹேர் போட்டு கொண்டு போய்விட்டால் தலையில் உள்ள ஈறு அசிங்கமாக தெரியும் என்ற பயம் வேறு இருக்கும். கீழே 3 வழிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கும் அதில் ஏதோ ஒன்றை பயன்படுத்தி முற்றிலுமாக பேன், ஈறு தொல்லைகளை எவ்வாறு நீக்குவது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • கிராம்பு -5
  • வேப்ப எண்ணெய் -2 ஸ்பூன்

கிராம்பு வை சிறிய உரலில் போட்டு நன்றாக பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும். அரைத்த கிராம்பு பொடியுடன் 2 ஸ்பூன் வேப்ப எண்ணெய் கலந்து தலையில் வேர் பகுதியில் தடவி 20 நிமிடங்கள் ஊறவைக்க தலையில் உள்ள பேன், ஈறு எல்லாம் இறந்து விடும். பிறகு தலைக்குளித்து விட்டு நன்றாக தலையை காயவைத்த முடியை உதறிவிட்டால் இறந்து போன ஈறு எல்லாம் கொட்டி விடும்.

  • தேங்காய் பால் – 1/2 கப்
  • மிளகு – 5

மிளகை நன்றாக பொடி செய்து தேங்காய் பாலில் சேர்த்து அதனை தலையில் அடிப்பகுதியில் நன்றாக தேய்த்து 20 நிமிடங்கள் கழித்து தலைக்குளித்தால் ஈறு, பேன் எல்லாம் இறந்து விடும்.

  • வேப்ப இலை- 1 கைபிடி அளவு
  • மிளகு – 1 ஸ்பூன்

இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து அதனை வடிக்கட்டி வைத்து சாறு மட்டும் எடுத்து தலையில் தேய்து 20 நிமிடங்கள் கழித்து குளித்து வர தலையில் உள்ள பேன், ஈறு செத்துவிடும்.

குறிப்பு: மிளகு, கிராம்பு சேர்த்து தலையில் வைத்து குளிக்கும் போது கண்களில்  கண்களில் படாதவாறு குளிக்க வேண்டும்.

மேலும் படிக்க: இனி நரைமுடிக்கு டை அடிக்காதீங்க..!! ஒரு முறை இதை ட்ரை பண்ணுங்க போதும்..!