ADMK DMDK: தேர்தல் என்றாலே நம் நினைவுக்கு வருவது திராவிட கட்சிகளாக அறியப்பட்ட வரும், அதிமுகவும், திமுகவும் தான். அதற்கு பின்னர் தான் பாமக, தேமுதிக, நாதக கட்சிகள் போன்றவை. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தல் அப்படி இல்லை அதிமுக, திமுகவை பின்னுக்கு தள்ளி தவெக முதல் இடத்தில் உள்ளது. நாள்தோறும் அனைத்து ஊடகங்களிளும் தவெகவின் செய்தி வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அவர் யாருடன் கூட்டணி அமைப்பார் என்பது பெரிய கேள்வியாக உள்ளது.
திமுகவை தனது அரசியல் எதிரி என்று விஜய் கூறியதால், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டார் என்பது தெளிவாகிறது. அதனால் மிக பெரிய கட்சியாக திகழும் அதிமுக உடன் அவர் கூட்டணி அமைப்பார் என்று கூறப்பட்டது. தவெக-அதிமுக கூட்டணி அமைந்தால் அது மிகப்பெரிய சக்தியாக உருமாறும் என்பதை அறிந்த திமுக, பாமக-தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க திட்டம் தீட்டி வருகிறது. ஆனால் இவர்கள் திமுக கூட்டணியில் சேர்வது கூட விஜய்யின் முடிவை பொறுத்து தான் இருக்கிறது.
ஏனென்றால் விஜய்யின் அரசியல் நகர்வை பொறுத்து தான் அனைத்து கட்சிகளின் கூட்டணிகளும் முடிவாகும். விஜய் எந்த கட்சியில் இணைகிறாரோ, அந்த கட்சியுடன் தான் கூட்டணி வைக்கப்படும் என்பதில் தேமுதிகவும், பாமகவும் உறுதியாக உள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ் கூட தற்போது திமுக உடன் இணக்கம் காட்டி வருவதால் திமுகவில் இணைவதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.
ஆனால் பிரேமலதா, கரூர் விவகாரத்தில் திமுகவிற்கு எதிராகவே பேசி வருகிறார். இதன் பின்புலத்தில், விஜய்-அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டால் தேமுதிக, அதிமுக உடன் கூட்டணி அமைப்பது உறுதி என்று, தேமுதிக வட்டாரங்கள் கூறி வருகின்றன. இதன் காரணமாக தான் அண்மை காலமாக அவரது பிரச்சாரத்தில் அதிமுகவை விமர்சிக்காமல் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.