AMMK BJP DMK: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தீவிர முனைப்பில் உள்ளன. அந்த வகையில் அதிமுகவிலிருந்து பிரிந்த டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்க கூடாது என்பதற்காக போராடி வருகிறார். செங்கோட்டையன், ஒபீஎஸ், சசிகலா, தினகரன் ஒன்றாக இணைந்த அதிமுக தலைமையை எதிர்த்த போது, இவர்களை அதிமுகவிலிருப்பவர்கள் திமுகவின் பி டீம் என்று கூறி வந்தனர்.
ஆனால் தற்போது நடக்கும் நிகழ்வுகளை வைத்து பார்த்தால், இவர்கள் நால்வரும் பாஜகவின் பி டீமாக இருப்பது போல தோன்றுவதாக பலரும் கூறி வருகின்றனர். ஏனென்றால் தினகரன் பாஜக கூட்டணியிலிருந்து விலகியதிலிருந்து நால்வர் அணி உருவாவதற்கு முன்பு வரை, பாஜகவை பல இடங்களில் குற்றம் சாட்டி வந்தார். ஆனால் தற்போது மத்திய அரசு கொண்டு வந்த SIR யை திமுக எதிர்த்து, அனைத்து கட்சி கூட்டம் கூட்டிய போது அதில் கலந்து கொள்ளாத தினகரன் அதற்குரிய விளக்கத்தையும் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறிய போது, SIR யை கண்டு திமுக ஏன் பயப்படுகிறது, தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி தான் நடக்கிறது. அப்படி இருக்க திமுகவை மீறி என்ன சதி வேலை நடந்து விட போகிறது என்று கேள்வி எழுப்பினார். இவரின் இந்த கருத்து இவர் பாஜகவின் பி டீமாக இருப்பதை உறுதிபடுத்துகிறது. இது இபிஎஸ்க்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

