இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் நகர் ஓவலில் இன்றைய தினம் ஆரம்பமாகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற சூழலில் அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்ற காரணத்தால், இந்த தொடரில் அவரை மிகப்பெரிய அளவில் ரன் எடுக்க விடாமல் ஆட்டமிழக்க செய்யும் விதத்தில் எல்லா பெருமையும் எங்களுடைய பந்துவீச்சாளர்களை சாரும் இப்போது வரையில் அவரை ஆடுகளத்தை விட்டு வெளியேற்றும் வழிமுறைகளை நாங்கள் கண்டறிந்த இருக்கிறோம் என்று கூறியிருக்கிறார் ஜோ ரூட்.
எதிர்வரும் போட்டிகளிலும் இதே முயற்சியில் அவருக்கு தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்து மிக விரைவாக அவரை ஆட்டம் இழக்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் தொடரை வெற்றி கொள்ள இயலும். இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் சேர்க்கப்பட வாய்ப்பு இருக்கிறது அவர் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்துவீச்சாளர் எங்களுக்கு எதிராக விக்கெட் விழுத்தியது மட்டுமல்லாமல் ரன்னும் சேர்த்திருக்கிறார். டெஸ்ட் போட்டியில் அவருடைய திறமை என்ன என்பதை நாங்கள் நன்றாக அறிவோம். அதற்கு ஏற்றவாறு நாங்கள் தயாராக இருக்கிறோம் என கூறியிருக்கிறார்.
அவரால் டெஸ்ட் போட்டியில் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பதும் எங்களுக்கு நன்றாக தெரியும் அவருடைய பந்துவீச்சை எதிர்கொள்வதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். போட்டியின்போது யார் பந்து வீசினாலும் அவர்களின் பந்துவீச்சை சமாளித்து ரன் எடுப்பது மட்டும் தான் எங்களுடைய வேலை அதை சரியாக நாங்கள் செய்வோம் என்று நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்திருக்கிறார் ஜோ ரூட்.
இப்படியான நிலையில், இந்த போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட இருக்கிறார். இந்திய அணியின் நிர்வாகம் கேட்டுக் கொண்டதின் பேரில் பிரசித் கிருஷ்ணா அணியின் சேர்க்கப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருக்கிறது.