தலைநகரில் முழங்கிய நாம் தமிழர் கட்சியினர்!

Photo of author

By Sakthi

தலைநகரில் முழங்கிய நாம் தமிழர் கட்சியினர்!

Sakthi

மத்திய அரசு கொண்டு வந்திருக்கின்ற மூன்று வேளான்சட்டங்களை திரும்ப பெற கோரி சென்ற பதினோரு தினங்களாக நடந்துவரும் டெல்லி சலோ விவசாயிகள் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியினர் பங்கேற்றுள்ளனர் அவர்கள் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் மத்திய அரசிற்க்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர்.

டெல்லியில் நடந்துவரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்குபெற்று அவர்களுக்கு ஆதரவளித்து வரும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மற்றும் உழவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்களுக்கு அந்த கட்சியின் தலைவர் சீமான் நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது, டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்குபெற்றிருக்கின்ற நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும் என தெரிவித்தார்.