தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை! எம்.எல்.ஏ. பளீச் பேட்டி!

Photo of author

By Hasini

தமிழகத்தை இரண்டாக பிரிக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை! எம்.எல்.ஏ. பளீச் பேட்டி!

பாரதிய ஜனதா தேசிய பொதுச் செயலாளரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான சி.டி ரவி எம்எல்ஏ பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்தியா என்று சொல்லும்போது அதில் ஒவ்வொரு மாநிலமும் ஒரு அடையாளம். அவர் மாநிலம் என்று சொல்லும்போது அதில் உள்ள மண்டலங்கள் மாவட்டங்கள் நமக்கு அடையாளமாகத் திகழ்கின்றன.

அவ்வாறுதான் தமிழ்நாட்டில் கொங்குநாடு அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஒரு அடையாளமாக திகழ்கிறது. பொதுவாக மாநிலங்கள் அந்தப் பகுதி மக்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து கொங்குநாடு மாநிலத்தை உருவாக்கும் திட்டம் பா.ஜ.கவிற்கு  இல்லை. அது குறித்து எங்கள் கட்சி ஆலோசிக்கவும் இல்லை.

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் கோவில்கள் உள்ளன. நமது இந்த கலாச்சாரம் இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு பொதுவான அடையாளம். மேகதாது திட்டத்தை பொறுத்தவரையில் அதை அரசியல் மற்றும் உணர்வுபூர்வமான பார்வையில் பார்க்க கூடாது.  இந்தப் மேகதாது பிரச்சினையில் இரு மாநிலங்களின் நலன்களும் காக்கப்பட வேண்டும். என்பதுதான் பாஜகவின் விருப்பம். ஒரு தேசிய கட்சியாக தேசிய கண்ணோட்டத்துடன் நாங்கள் இதை அணுகுகிறோம். செயல்படக்கூடாது பிரச்சினைகளில் அரசியல் நோக்கத்துடன் செயல்பட கூடாது. கர்நாடகமும், தமிழகமும் இந்தியா-பாகிஸ்தான் அல்ல.

இந்த மேகதாது பிரச்சினையில் இந்த இரு மாநிலங்களும் ஏன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. இரு மாநிலங்களுக்கும் சகோதரத்துவ தொடர்பு பழங்காலம் தொட்டு உள்ளது. இதை நாம் மறக்கக்கூடாது. தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்ததால்தான் தோல்வி அடைந்தோம். என்று அதிமுக முன்னாள் மந்திரி சிவி சண்முகம் கூறியிருக்கும் கருத்து சரியல்ல. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் கடுமையாக உழைத்தோம்.

ஆனால் வெற்றியை பெறமுடியவில்லை. ஜெயலலிதா இருந்த போதும் அதிமுக பல முறை தோல்வியை சந்தித்து உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தமிழக பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இது அனைவரும் கலந்து ஆலோசனை நடத்தி எடுக்கப்பட்ட முடிவு. திறமை வாய்ந்த ஒரு இளைஞருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பது எங்களின் நோக்கம்.

இதற்கு முன்பு கட்சியை வழிநடத்தி அவர்களும் கட்சியை பலப்படுத்த தங்களின் பங்காற்றியுள்ளனர். கட்சியில் மூத்த தலைவர்கள் புறக்கணிக்கவில்லை. பலருக்கு முக்கிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதுபோலதான் முருகனுக்கும் மத்திய இணை மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது. மாண்டியா மாவட்டத்தில் சட்டவிரோத கல்குவாரி விஷயத்தில் சுமலதா  கூறியது குறித்து விசாரணை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதை விடுத்து அரசியல் ரீதியாக பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்வது என்பது சரியான நடவடிக்கை அல்ல.

கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா இருக்கிறார். அவரை பதவியில் தொடர்ந்து நீடிக்கும் விஷயத்தில் கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். முதல் மந்திரி பதவிக்கு காங்கிரஸில் டி.கே.சிவகுமார், சித்தராமையா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. ஆனால் கர்நாடக சட்டசபைக்கு அடுத்த முறை நடைபெறும் தேர்தலில் பாஜக வெற்றி பெறும். அதனால் காங்கிரஸ் தலைவர்கள் முதல் மந்திரி பதவிக்கு கனவு காணத் தேவையில்லை. இவ்வாறு சிடி ரவி கூறினார்.