பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை…! அவர்தான் பயப்படுகிறார் ஜெயக்குமார் அதிரடி…!

Photo of author

By Sakthi

பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை…! அவர்தான் பயப்படுகிறார் ஜெயக்குமார் அதிரடி…!

Sakthi

திருமாவளவன் அவர்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் அதிமுகவிற்கு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் அதிரடியாக தெரிவித்திருக்கின்றார்.

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் புதிதாக கட்டப்பட்டு இருக்கும் நவீன மீன் விற்பனை நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வு,15 விசைபடகு மீனவர்களுக்கு சாட்லைட் கைபேசி ஆகியவற்றுக்கான ஒதுக்கீட்டு ஆணை வழங்கும் நிகழ்ச்சி, மீன்வளத்துறைநிகழ்ச்சிகள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் தலைமையில் நடந்தது.

அதன்பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர், தமிழக மீனவர்களின் மீது இலங்கை மீனவர்கள் தாக்குதல் நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்க ஒன்று, இது சம்பந்தமாக மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றும் ஓபிசி பிரிவினருக்கு மருத்துவ படிப்பில் சம்பந்தமாக சட்ட ஆலோசகர்களிடம் ஆலோசனை பெறப்பட்டு, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்க இருக்கிறார். என்று தெரிவித்திருக்கிறார்.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டு மசோதாவை அறிமுகப்படுத்தியது அதிமுக அரசுதான். இதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்து அதற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டே இருக்கின்றோம்.

எங்கள் கட்சிக்கு அதிகாரம் முக்கியம் இல்லை தமிழ்நாட்டின் நலன் மட்டுமே எங்கள் கவனத்தில் இருக்கும்.

ஆகவே நாங்கள் இறுதி வரையில் போராடுவோம். இதில் நிச்சயம் நாங்கள் வெற்றியும் அடைவோம் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்துவிடக் கூடாது என்ற காரணத்திற்காகத்தான் குஷ்பு கைதுசெய்யப்பட்டார்.

திருமாவளவன் அவர்களுக்கு பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. எனவும் எதிர்வரும் சட்டசபைத் தேர்தலிலும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.

ஆனால் ஒரு சிலர் வேண்டுமென்றே திட்டம்போட்டு அதிமுக மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புகிறார்கள் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. என்று தெரிவித்திருக்கின்றார்.