பத்திரிகையாளர்களிடம் சீறிய சுப்புலட்சுமி ஜெகதீசன்! பரபரப்பு பின்னணி!

Photo of author

By Sakthi

திமுகவின் இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 100 நாள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றார். கட்சியில் உதயநிதியின் ஆதிக்கம் தான் அதிகமாக இருக்கின்றது.அவரால் மூத்த தலைவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் இளைஞர் அணியை சார்ந்தவர்களுக்கு தான் அதிகமாக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.

இந்தநிலையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில், தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கின்றது அந்த கட்சி. அடுத்த 75 நாட்களில் 15 தலைவர்கள், 15 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் மேற்கொண்டு, 15,000 பிரச்சாரக் கூட்டங்களை மேற்கொள்ள இருக்கிறார்கள். ஸ்டாலின் ஜனவரியில் காஞ்சிபுரத்திலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றார்.

செய்தியாளர்கள் கூட்டத்தில்,திமுக முதன்மைச் செயலாளர் கே என் நேருவிடம், கட்சியின் மூத்த தலைவர்கள் ஒதுக்கப்படுகிறார்களே என்ற கேள்வியை எழுப்பிய போது நீங்கள் நினைப்பது போல் எதுவும் கிடையாது. மூத்த தலைவர்கள் ஒதுக்கப்படவில்லை. டி ஆர் பாலு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில் இருந்து மாவட்டம்தோறும் சுற்றி வருகின்றார்.

ஸ்டாலின் அவர்களும், துரைமுருகன் அவர்களும், ஜனவரி மாதத்தில் பிரச்சாரத்தை ஆரம்பிக்கிறார்கள். ஆர் எஸ் பாரதி திமுகவின் அமைப்புச் செயலாளராக இருந்து தன்னுடைய பணிகளை செய்து வருகின்றார். துணைப்பொதுச்செயலாளர் களும், அதோடு நானும், தேர்தல் பணியை செய்து வருகிறோம். மூத்த தலைவர்கள் அனைவரும் அவரவர் வேலையை செய்து வருகிறார்கள் இளையவர்கள் அவர்களுடைய வேலையை கவனித்து வருகிறார்கள் என்று தெரிவித்தார் கே என் நேரு.

பேசிக்கொண்டிருக்கும்போதே நாங்களே அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தால் அவர்கள் எல்லாம் எப்போது தலைவராக ஆவது அதனால்தான் அவர்களை களத்தில் இறங்கி வேலை செய்ய சொல்லி இருக்கின்றோம். என்று கூறினார் துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன்