
DMK VSK: தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முக்கிய கட்சிகள் அனைத்தும் தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், கூட்டணி கணக்குகளும் தீவிரமடைந்துள்ளன. திமுக கூட்டணியிலிருக்கும் கட்சிகள் தேர்தல் நெருங்கும் நேரம் பார்த்து, திமுக தலைமையிடம் நிறைய கோரிக்கைகளை முன் வைத்து வருகிறது. அதிலும் முக்கியமாக ஆட்சியில் பங்கு என்ற குரல் தான் அதிகளவில் ஒழித்து வருகிறது.
அதிக தொகுதிகளையும், ஆட்சியில் பங்கையும் தரவில்லை என்றால் தவெக கூட்டணிக்கு சென்று விடுவோம் என்ற கழக குரலும் திமுக கூட்டணியில் ஒழித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக நீண்ட காலமாக திமுக கூட்டணியில் இருக்கும் விசிகவிற்கு சென்ற தேர்தலில் 2 சீட் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தது அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதனால் இந்த தேர்தலில் திமுகவிடம் எங்களுக்கு கிடைக்க வேண்டிய தொகுதிகளை முறையாக கேட்டு பெறுவோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக எங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால், கூட்டணி கட்சிகளிடையே பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என்று திமுக தலைமை அஞ்சிக்கிறது என்றும் கூறினார். இதற்கு முன் விசிகவை சேர்ந்த நிர்வாகி ஒருவர், ஆட்சி பங்கிற்காக எந்த சதி வேலைகளையும் செய்ய தயங்க மாட்டோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களின் இந்த தொடர் வலியுறுத்தலின் பின்னணியில் விஜய் உடனான கூட்டணி கணக்கு மறைந்திருக்குமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
