ராஜா கதைகளில் கேள்விப்பட்டு இருப்போம்! டெல்லி போனால் நேரில் பார்க்கலாம்!
நாம் பாட்டி சொன்ன கதைகளில் எல்லாம் பார்த்திருப்போம். ஒரு இடத்தில் உள்ளே சென்றால் அது அரண்மனையில் வேறு ஒரு இடத்திற்கு சென்று சேரும். அதன் பெயர்தான் சுரங்கப்பாதை என்று சொல்வார்கள். அந்த காலத்தில் கதைகளோடு கேட்டதோடு சரி. அதை யாரும் நேரில் எல்லாம் பார்த்து இருக்க வாய்ப்பு இல்லை.
ஆனால் தற்போது டெல்லி தலைமை செயலகத்தில் இருந்து செங்கோட்டை வரை உள்ள சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை கேட்கும் போதே உள்ளுக்குள் ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது. இதன் பயன் என்ன? யாருக்கும் தெரியாமல் நாம் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும் அவ்வளவு தான்.
நம் முன்னோர்கள் எவ்வளவு நுண்ணறிவோடு செயல்பட்டு இப்படி ஒரு நுணுக்கமான வேலைகளை செய்துள்ளனர். அது இத்தனை ஆண்டுகாலம் கழித்து நாம் இப்போது தான் பார்த்துள்ளோம் என்பது அரிதிலும் அரிதான நிகழ்வுதான்.
டெல்லி தலைமை செயலகத்தில் இருந்து, செங்கோட்டை வரை சுரங்கப் பாதை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது சுதந்திர போராட்ட காலத்தில், ஆங்கிலேயர்கள் அந்த சுரங்கத்தை பயன்படுத்தி இருக்கலாம் என டெல்லி சட்டசபை சபாநாயகர் ராம் நிவாஸ் கோயல் தெரிவித்துள்ளார். தற்போது அந்த சுரங்கப் பாதையின் முகப்புப் பகுதி கண்டறிந்து உள்ளதாகவும், விரைவில் புனரமைப்பு செய்வதாகவும் தெரிவித்த அவர், அடுத்த ஆகஸ்ட் 15-ல் பொதுமக்கள் பார்வையிடுவதற்கு தயார் செய்யப்படும் எனவும், ராம் நிவாஸ் கோயல் மகிழ்ச்சி செய்தியை தெரிவித்துள்ளார்.