இந்தியா மீதான போரை முழுமையாக முறியடிப்போம்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி

Photo of author

By Sakthi

இந்தியா மீதான போரை முழுமையாக முறியடிப்போம்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி
Amit Shah : டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்  இந்தியா மீது தொடுக்கப்படும் மறைமுகமான போரை நாங்கள் முழுமையாக முறியடிப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூறியுள்ளார்.
ஜம்மு மாநிலத்தில் சமீபத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று(ஜூன்16) டெல்லியில் உள்துறை அமித்ஷா அவர்களின் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பலர் பங்கேற்றனர். இதையடுத்து பயங்கரவாத செயல்களுக்கு உடனே பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அதற்கு ஏற்ற வகையில் பாதுகாப்பு அமைப்புகள் செயல்பட வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் உத்தரவிட்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய உள்துறை அமித்ஷா அவர்கள் “பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை கட்டுப்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு பகுதிகளில் முன்பு நடைபெற்றதை போல தீவரவாத தாக்குதல் தற்பொழுது நடைபெறுவதில்லை. அங்கு தீவிரவாத தாக்குதல்கள் கணிசமாக குறைந்துள்ளது.
தீவிரவாதம் மூலமாக இந்திய நாட்டின் மீது மறைமுகமான போர் தொடுக்கப்படுகின்றது. இந்த மறைமுகமான போரை நாங்கள் முழுமையாக முறியடிப்போம். மத்திய பாதுகாப்பு படைகள் ஒன்றிணைந்து செயல்பட்டு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதத்தை முற்றிலுமாக அழிக்க வேண்டும்.
காஷ்மீர் மாநிலத்தில் ஒருவழியாக வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டது. காஷ்மீர் மாநிலத்தில் வாக்குப்பதிவு சதவீதமும் உயர்ந்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு உதவி செய்த பாதுகாப்பு படையினருக்கு நன்றி” என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் கூறியுள்ளார்.