அதிமுக கழகத்தை கண்டிப்பாக மீட்போம்! டிடிவி தினகரன் அறிவிப்பு!!

Photo of author

By Sakthi

அதிமுக கழகத்தை கண்டிப்பாக மீட்போம்! டிடிவி தினகரன் அறிவிப்பு!!

Sakthi

அதிமுக கழகத்தை கண்டிப்பாக மீட்போம்! டிடிவி தினகரன் அறிவிப்பு!
முன்னாள் முதலமைச்சர் ஒ பன்னீர் செல்வம் அவர்களுடன் இணைந்து அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை கண்டிப்பாக மீட்போம் என்று அமமுக கட்சி தலைவர் டிடிவி தினகரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அமமுக கழகத்தின் சார்பில் நடைபெற்ற கொடியேற்ற விழாவில் கலந்து கொண்டு பேசிய டிடிவி தினகரன் அவர்கள் அமமுக கலகத்தின் கொடியை ஏற்றிவைத்தார். பிறகு பேசிய டிடிவி தினகரன் அவர்கள் ஒ பன்னீர் செல்வம் அவர்களுடன் சேர்ந்து அதிமுக கட்சியை மீட்போம் என்று கூறியுள்ளார்.
கொடியேற்றத்திற்கு பிறகு பேசிய டிடிவி தினகரன் அவர்கள் “அமமுக கட்சியின் ஆட்சி அமைந்ததும் கொடநாடு கொள்ளை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும். தற்போது ஒ பன்னீர் செல்வம் அவர்களும் நம்முடன் இணைந்துள்ளார். இவருடன் சேர்ந்து அம்மாவின் தாய் கழகமான அதிமுக கழகத்தை மீட்போம்” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “எடப்பாடி அவர்கள் செய்த நான்கு ஆண்டு ஆட்சியின் மீது கோபப்பட்டு திமுக திருந்தி இருக்கும் என்று நினைத்து அவர்களுக்கு வாக்களிதார்கள். ஆனால் திமுக கட்சி நாங்கள் திருந்தவே மாட்டோம். எங்களுக்கு எதற்கு ஆட்சிப் பொறுப்பை கொடுத்தீர்கள் என்று மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு குடும்பத்தில் 30000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருந்ததால்தான் அவரது துறை மாற்றப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார்.