டிக்கெட் எல்லாம் எடுக்க மாட்டோம்!! கர்நாடக பேருந்துகளில் பெண் பயணிகள் வாக்குவாதம்!!
கர்நாடக மாநிலப் பேருந்துகளில் பெண் பயணிகள் டிக்கெட் எடுக்காமல் நடத்துனர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா அவர்களும் துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் அவர்களும் பதவியேற்று கொண்டனர்.
தேர்தல் பரப்புரையின் பொழுது கொடுக்கப்பட்ட வாக்குறிதிகள் கட்டாயமாக நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சி அறிவித்தது. பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணம், 200 யூனிட் இலவச மின்சாரம் போன்ற 5 வாக்குறுதிகள் முதல் கட்டமாக நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
கர்நாடக சட்டசபையில் இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் இன்னும் இந்த இலவச திட்டங்களை செயல்முறைக்கு காங்கிரஸ் கட்சி கொண்டு வரவில்லை என்று தெரிகிறது.
200 யூனிட் இலவச மின்சாரம் அளிக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியதை அடுத்து காங்கிரஸ் மாநிலத்தில் பல கிராமங்களில் மக்கள் மின்சாரக் கட்டணம் செலுத்த மாட்டோம் என்று மின்சார ஊழியர்களுடன் வாக்கு வாதம் செய்து வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பெண்களுக்கு கர்நாடக மாநில பேருந்துகளில் இலவச பயணம் என்ற வாக்குறுதியை அடுத்து மாநில பேருந்துகளில் பெண்கள் டிக்கெட் எடுக்காமல் நடத்துனர்களிடம் வாக்குவதம் செய்கின்றனர் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து கர்நாடக போக்குவரத்து துறை KSRTC காங்கிரஸ் அரசுக்கு பெண்களுக்கு பேருந்துகளில் இலவச பயணத் திட்டத்தை வேகமாக செயல்படுத்தக் கோரி கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் அரசுக்கு இலவச திட்டங்கள் தொடர்பான அழுத்தம் அதிகரித்துள்ளது.