தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இந்த மாவட்டங்களின் நிலை இதுதான்!

0
208

தமிழ்நாட்டின் இன்றைய தினம் நீலகிரி , கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர், திருப்பத்தூர், உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

நாளைய தினம் திண்டுக்கல், தேனி, நீலகிரி, உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி ,காரைக்கால் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொருத்தவரையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நகரத்தின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ், ஒட்டி இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது.

Previous articleஇடா புயல்! வெள்ளத்தில் தத்தளிக்கும் அமெரிக்கா!
Next articleஇரண்டாவது நாளாக உயராத பெட்ரோல் டீசல் விலை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here