சென்னையில் திடீரென்று உள்வாங்கிய கடல்! காரணம் இதுதானாம்!

Photo of author

By Sakthi

சென்னையில் திடீரென்று உள்வாங்கிய கடல்! காரணம் இதுதானாம்!

Sakthi

Updated on:

பொதுவாக ஒரு இயற்கை பேரழிவு உண்டாகப் போகிறது என்றால் குறைந்தது  24️ மணி நேரத்திற்கு முன்பாகவே அது தொடர்பாக ஏதாவது ஒரு அறிகுறி தென்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. அதேபோன்ற அறிகுறிகள் பலமுறை தென்படுகிறது அது போன்ற அறிகுறிகள் தென்பட்டு அழிவுகளும் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு சிறந்த உதாரணம் கடல்தான் கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் லட்சக்கணக்கானோர் சிக்கி மரணமடைந்தார்கள் அந்த நிகழ்வு இன்று வரையில் அனைவரின் மனதிலும் நிலை கொண்டு உள்ளது.

அந்த விதத்தில் சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மெரினா கடற்கரை பட்டினப்பாக்கம், பெசன்ட் நகர், காசிமேடு, கடல் பகுதியில் கடல் நீர் திடீரென்று பொருள் வாங்கியதாக சொல்லப்படுகிறது. சுமார் 10 மீட்டர் தூரம் வரையில் கடல் உள்வாங்கியது என தகவல்கள் கிடைத்திருக்கின்றன. நேற்று காலையில் கடற்கரையோரமாக நடைபயிற்சி சென்றவர்கள் இதை பார்த்து அச்சம் அடைந்ததாகவும், பலர் தெரிவிக்கிறார்கள். சமூக வலைதளங்களில் சுனாமி எச்சரிக்கை யாக இருக்குமோ என்றெல்லாம் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர்தான் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் சுனாமி எச்சரிக்கையும், அங்கு விடுக்கப்பட்டது இந்த சம்பவத்தையடுத்து சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் கடல் உள்வாங்கிய நிகழ்வு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய தகவல்கள் சென்னை வாசிகளை சற்று கலக்கமடைய வைத்தது. ஆனாலும் இந்த நிகழ்வு குறிப்பிட்ட ஒரு சில மணி நேரங்கள் நீடித்ததாகவும் அதன் பிறகு கடல் பகுதி இயல்புநிலைக்குத் திரும்பிய தாகவும் சொல்லப்படுகிறது.

அதற்கு ஏற்றார்போல நேற்று அதே கடல் பகுதிகளில் எப்போதும் போலவே கடல் அலை கரை பகுதிகளில் மோதி மணற்பரப்பை நினைத்துக்கொண்டு இருந்தது இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆய்வாளர்களிடம் கேட்டறிந்த போது சுனாமி எச்சரிக்கைக் மட்டும் கடல் உள் வாங்குவது கிடையாது, கடலில் காற்றின் வேகம் குறையும் போது கூட கடல் உள்வாங்கும் நிகழ்வுகள் பல சமயங்களில் நடைபெறும் ஆகவே அதன் காரணமாகவும் உருவாகியிருக்கலாம் என்று தெரிவித்தார்கள்.