நியூசிலாந்தின் உலகக் கோப்பை கனவை கலைத்த வெஸ்ட் இண்டீஸ்! அவ்வளவுதான் இனி ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான்!

0
224
West Indies destroyed New Zealand's World Cup dream! That's all you have to go to town!
West Indies destroyed New Zealand's World Cup dream! That's all you have to go to town!
நியூசிலாந்தின் உலகக் கோப்பை கனவை கலைத்த வெஸ்ட் இண்டீஸ்! அவ்வளவுதான் இனி ஊருக்கு கிளம்ப வேண்டியதுதான்!
இன்று(ஜூன்13) காலையில் நடைபெற்ற மேற்க்கிந்திய தீவுகளுக்கு எதிரான லீக் சுற்றில் தோற்றதின் மூலமாக பலம் வாய்ந்த நியூசிலாந்து அணி நடப்பு உலகக் கோப்பை தொடரை விட்டு வெளியேறும் நிலைக்கு சென்றுள்ளது.
மேற்கிந்திய தீவுகள் நாட்டில் ட்ரினிடாட் நகரில் உள்ள மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று(ஜூன்13) மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 76 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இறுதியாக நிலைத்து நின்று ஆடிய சர்ஃபேன் ரூதர்போர்ட் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்கத் தொடங்கினார். இவருடைய அதிரடி ஆட்டத்தால் வெஸ்ட் இண்டீஸ் அணி சரிவில் இருந்து மீண்டது.
தொடர்ந்து அதிரடி காட்டிய சர்ஃபேன் ரூதர்போர்ட் அரைசதம் அடித்து 39 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணியில் சிறப்பாக பந்து வீசிய ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டிம் சவுத்தி, லோக்கி பெர்குசன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கத்துடன் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்துடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. இதையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய டெவான் கான்வே 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். மற்றொரு தொடக்க வீரர் ஃபின் ஆலன் நிதானமாக விளையாடத் தொடங்கினார்.
ஃபின் ஆலன் ஒருபுறம் ரன்களை சேர்க்க மறுபுறம் விளையாடிக் கொண்டிருந்த ரச்சின் ரவீந்திரா 10 ரன்களுக்கும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேன் வில்லியம்சன் 1 ரன்னிற்கும் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து விளையாடிய ஃபின் ஆலன் 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க டேரி மிட்செல் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இருப்பினும் நியூசிலாந்து அணிக்கு நம்பிக்கை கொடுக்கும் விதமாக களத்தில் விளையாடிக் கொண்டிருந்த கிளேன் பிலிப்ஸ் 40 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணியின் உலகக் கோப்பை கனவு கலைந்து போனது. இருப்பினும் மிட்செல் சேன்ட்னர் நம்பிக்கையை இழக்காமல் போட்டியை கடைசி பந்து வரை கொண்டு சென்றார்.
கடைசியில் 6 பந்துகளுக்கு 33 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் மிட்செல் சேன்ட்னர் தொடர்ச்சியாக இரண்டு சிக்சர்கள் அடித்தார். அதன் பின்னர் 20வது ஓவர் நான்காவது பந்தில் ஒரு சிக்சர் அடித்தார். பின்னர் இரண்டு பந்துகளில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு பந்து டாட் பந்தாக அமைந்தது. பின்னர் கடைசி பந்தில் ஒரு ரன். மட்டுமே எடுக்க முடிந்தது.
இதனால் நியூசிலாந்து அணி 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் மட்டுமே எடுத்து மேற்கிந்திய தீவுகள் அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மேற்கிந்திய தீவுகள் அணியில் பந்துவீச்சில் அல்சாரி ஜோஸப் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். குடகேஷ் மோட்டி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியில் சிறப்பாக விளையாடி 68 ரன்கள் சேர்த்த சர்பேன் ரூதர்போர்ட் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதையடுத்து தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணி தன்னுடைய முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியிடம் படுதோல்வியை சந்தித்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான போட்டியிலும் தோல்வி பெற்று தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியை பெற்றுள்ளது. இதனால் நியூசிலாந்து அணி நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழக்கும் தருவாயில் உள்ளது.