ஜீவசமாதி அடைவேன் என்று சொன்ன சாமியாரின் பரிதாபம்! வீட்டில் வந்த துர்நாற்றம்!

0
126
What a pity the pastor who said he would reach the grave! The stench that came home!
What a pity the pastor who said he would reach the grave! The stench that came home!

ஜீவசமாதி அடைவேன் என்று சொன்ன சாமியாரின் பரிதாபம்! வீட்டில் வந்த துர்நாற்றம்!

திண்டுக்கல் சாணார்பட்டி அருகே ஆவிளிப்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் கரந்தமலை. 75 வயதான நபர் ஒரு கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கடந்த 15 வருடங்களுக்கு முன்னால் தவறிவிட்டார். மூன்று மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் உள்ளனர்.

அதன் காரணமாக அவர் மட்டுமே தனியாக வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவருக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம். அதன் காரணமாக அவர் குறிசொல்வதை வழக்கமாக செய்து வந்தார். இந்த நிலையில் இவரிடம் குறி பார்ப்பதற்காக மக்கள் நேற்று வந்தனர். அவரது வீட்டிற்கு வந்த அவர்கள், அவரது வீட்டில் சாமி அறையில் இருந்து ஒருவித துர்நாற்றம் வீசியுள்ளதை உணர்ந்தனர்.

எனவே இதுகுறித்து தகவல் சாணார்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து  வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இவர் கடந்த சில தினங்களாகவே அப்பகுதி மக்களிடம் நான் ஜீவசமாதி அடைந்து, கடவுளிடம் செல்ல இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் அவரது வீட்டின் சாமி அறையிலேயே 6 அடி பள்ளம் தோண்டியுள்ளார்.

மேலும், அதை சுற்றிலும் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளார். பின்னர் அந்த பள்ளத்தில் அமர்ந்து மணல் மூட்டைகளை கீறியுள்ளார். இதனால் அதிலிருந்து சிதறிய மணல் துகள்கள் அவரை மூச்சு விடமுடியாமல் பரிதாபமாக மூச்சு திணறி இறந்து உள்ளார். எனவே போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleதிருவண்ணாமலை கிரிவலத்திற்கு பக்தர்கள் வந்து செல்ல அனுமதி! ஆனால் இதற்கு கிடையாது! – தமிழக அரசு!
Next articleதேர்வுகளை இப்படித்தான் நடத்த வேண்டும்! அரசுக்கு வலியுறுத்திய எதிர்கட்சி தலைவர்!