எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு செய்யலாம்..?? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள்..!!

Photo of author

By Janani

எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்து வைத்து வழிபாடு செய்யலாம்..?? நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில ஆன்மீக குறிப்புகள்..!!

Janani

எந்தெந்த பொருட்களில் பிள்ளையார் பிடித்தால் என்ன பலன்:

1. மஞ்சளில் பிள்ளையார்-சகல சௌபாக்கியமும் கிடைக்கும், செவ்வாய் தோஷம் நீங்கும்.

2. வெள்ளருட்டில் பிள்ளையார்- பில்லி சூனியம் விலகும்.

3. சந்தன பிள்ளையார்- புத்திர பேரு கிடைக்கும்.

4. வெண்ணை பிள்ளையார்-கடன் தொல்லை நீங்கும்.

5. வாழைப்பழ பிள்ளையார்- வம்ச விருத்தி உண்டாகும்.

செவ்வாய்க்கிழமையில் வாங்க கூடாதவை:

1. கருப்பு நிற ஆடைகளை செவ்வாய்க்கிழமையில் வாங்க கூடாது. இது மாங்கல்ய தோஷம் வினைகளை ஏற்படுத்தும்.

2. செவ்வாய்க்கிழமையில் இரும்பு பொருட்களை வாங்கினால் அசுபமாகவும், நிதி நெருக்கடிகளையும் ஏற்படுத்தும்.

3. கண்ணாடி பொருட்களை வாங்கினால் பண இழப்பும், குடும்பத்தில் சண்டை சச்சரவுகளும் ஏற்படும்.

4. செவ்வாய்க் கிழமையில் இறைச்சியை வீட்டில் சமைப்பதையோ, உண்பதையோ தவிர்த்துக் கொள்வது நல்லது.

ஒருவருக்கு குலதெய்வத்தின் சாபம் இருந்தால் என்ன நடக்கும்?:

1. சம்பாதிக்கக்கூடிய பணத்தை இவர்களால் அவ்வளவாக சேமித்து வைக்க முடியாது. இவர்களது கையில் பணம் தாங்காது. குடும்பத்தில் சந்தோஷம், நிம்மதி என்பதும் அவ்வளவாக இருக்காது.

2. அதேபோன்று குலதெய்வத்தின் ஆசிர்வாதம் இல்லாதவர்கள் இந்த உலகத்தில் எந்த தெய்வத்தை வழிபட்டாலும், அதனால் இவர்களுக்கு எந்த ஒரு பிரயோஜனமும் ஏற்படாது. அவர்களது பிரச்சனையை தீர்க்க எந்த பரிகாரம் செய்தாலும் அது பலிக்காது. குலதெய்வ வழிபாட்டை மறவாமல் இவர்கள் செய்தால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அருளும் இவர்களுக்கு கிடைக்கும்.

ஒரு மண்டலம் (48 நாட்கள்) ஏன் சக்தி வாய்ந்தது?:

1. ஒரு பாலடைந்த ஆலயம் கூட கும்பாபிஷேகம் செய்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல அபிஷேகம் செய்தால், மீண்டும் அங்கு அந்த தெய்வம் வந்து உயிர்ப்பெறும்.

2. 48 நாட்கள் தொடர்ந்து நமது ஊரில் உள்ள பழமையான சிவன் ஆலயத்திற்கு சென்று இருந்தால் நமது வாழ்க்கையில் ஒரு பிரமிப்பூட்டம் அதிசயம் ஏற்படும்.

3. தொடர்ந்து 48 நாட்கள் தினமும் குலதெய்வ கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றி 15 நிமிடம் வேண்டிக் கொண்டால், நமது குலதெய்வத்தின் ஆசி இப்பிறவி முழுவதும் நமக்கு கிடைக்கும்.

அனைத்து விதமான நோய்களும் வறுமையும் நீங்க:

1. எம்பெருமான் சிவன் கோவிலில் உள்ள வன்னி மரம் அல்லது வில்வம் மரத்தை 21 முறை வலம் வந்து நமது குறைகளை கூற, நல்ல பலன் கிடைக்கும் தீர்ப்புகள் சாதகமாகும்.

2. இம்மரங்களுக்கு நாம் கூறுவதை கேட்கும் சக்தி உள்ளதாக புராணங்கள் சொல்கின்றன. பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் காட்சி தரும் சிவனை வழிபடுபவர்களுக்கு ஆயிரம் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். அதிலும் ஈசானிய மூலையில் ஈஸ்வரனுக்கு காட்டக்கூடிய தீப ஆராதனையை நாம் பார்க்கும் பொழுது, எல்லா விதமான நோய்களும், வறுமையும் நீங்கும்.

பௌர்ணமியில் குங்கும அர்ச்சனை:

1. மாதந்தோறும் வரும் பௌர்ணமி நாட்களில் அருகில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று, உங்களுடைய கைகளால் குங்குமம் வாங்கி கொடுத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

2. அம்மனுக்கு அர்ச்சனை செய்யப்பட்ட அந்த குங்குமத்தை வாங்கி வந்து நமது வீட்டில் வைத்து தினமும் நமது நெற்றியில் வைத்துக் கொள்வதன் மூலம் வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.