வீட்டில் உள்ள செடிகள் பட்டு போனால் என்ன பலன்..??

Photo of author

By Janani

வீட்டில் உள்ள செடிகள் பட்டு போனால் என்ன பலன்..??

Janani

நாம் மிகவும் ஆசையாக, நமக்கு பிடித்த செடிகளை வாங்கி வந்து நமது வீட்டில் வளர்த்து வருவோம். நன்றாக வளர்ந்து கொண்டு இருந்த செடி திடீரென பட்டு போனால் ஏதேனும் பில்லி சூனியம் இருக்குமோ, கண் திருஷ்டியாக இருக்குமோ, வீட்டில் ஏதேனும் தீய சக்திகள் இருக்குமோ, நாம் ஏதேனும் பாவங்கள் செய்து விட்டோமோ என்றெல்லாம் நினைத்து புலம்பி இருப்போம். இவ்வாறு செடிகள் பட்டு போனால் அதற்கு என்ன பலன் என்பது குறித்து தற்போது காண்போம்.

சில செடிகளை ஆசையாக நமது வீட்டின் அழகுக்காக என வாங்கி வந்து வளர்ப்போம். சில செடிகளை வாஸ்துக்காகவும் வளர்ப்போம். நமது தோஷங்களை நீக்குவதற்காக எனவும் சில செடிகளை வளர்ப்போம். வீட்டில் தெய்வீக சக்தி, செல்வம், அதிர்ஷ்டம் ஆகியவை கிடைக்க வேண்டும் எனவும் சில செடிகளை வளர்ப்போம்.

நமது வீட்டில் தெய்வீக சக்திகளை அதிகரிக்க துளசி, பிரம்ம கமலம், கிருஷ்ண கமலம் இது போன்ற செடிகளை வளர்த்து வருவோம். இந்த செடிகளை சரியான முறையிலும், மிகுந்த சுத்தபத்தத்துடனும், ஆச்சாரத்துடனும் வளர்க்க வேண்டும். தீட்டு காலங்களில் அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, அந்த செடிக்கு தண்ணீர் ஊற்றவோ, அந்தச் செடியின் அருகில் அடிக்கடி செல்லவோ கூடாது.

அவ்வாறு செய்தால் அந்தச் செடியின் மகிமை போய்விடும். அசுத்தமான பொருட்களான மாமிசம், முடி, நகம் இது போன்ற பொருட்களையும் இந்த செடிகளுக்கு அருகில் போடக்கூடாது. இல்லை என்றால் அந்தச் செடி தனது தெய்வீகத்தன்மையை இழந்து பட்டு போய்விடும்.

இந்தச் செடிகள் பட்டு போனால் வீட்டில் தெய்வீக சக்தி மற்றும் செல்வ வளம் குறையும் என்று கூறப்படுகிறது. எனவே இந்த தெய்வீக செடிகள் பட்டுப்போனால் உடனே அதனை மாற்றி விட்டு, வேறு ஒரு புதிய செடியினை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சில செடிகளில் உள்ள பூக்கள் அழகாக உள்ளது அல்லது இலைகள் அழகாக உள்ளது என்று ஆசையாக வாங்கி வந்து நமது வீட்டில் வைத்து வளர்த்து வருவோம். தினமும் காலை எழுந்ததும் அந்த செடிகளை தான் பார்த்து ரசித்து வருவோம். இந்த வகை செடிகள் நமது எமோஷனல் உடன் தொடர்பு கொண்டது.

இந்த மாதிரியான செடிகள் பட்டு போவதற்கு காரணம் நமது வீட்டிற்கு வர இருந்த கண் திருஷ்டிகளையும், தீய சக்திகளையும் ஈர்த்துக் கொண்டு அந்தச் செடி பட்டுப் போவதாக கூறப்படுகிறது.

ஒரு சில செடிகளை வளர்ப்பதன் மூலம் நவ கிரகங்களின் அருளும், ஆசியும் கிடைக்கும் என்றும், தடைபட்ட காரியங்கள் நிறைவேறும் என்றும் நமது பெரியோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில் தடைகளை நீக்கக்கூடிய சில செடிகளையும், தோஷங்களை நீக்கக்கூடிய வாஸ்து செடிகளையும் வளர்த்து வருவோம்.

இந்த வகைச் செடிகள் பட்டு போவதற்கு காரணம் நமக்கு வர இருந்த பெரிய ஆபத்துக்களை ஏற்றுக் கொண்டு நமது உயிரை காப்பாற்ற தான் அந்த செடி பட்டு போவதாக ஒரு நம்பிக்கை உள்ளது. ‘தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனது’ என்பதற்கு இணங்க நமது உயிரை காத்துக் கொடுக்கும்.

இவைகள் இல்லாமல் செடிகளுக்கு அதிகம் தண்ணீர் ஊற்றினாலும், தண்ணீர் ஊற்றாமல் இருந்தாலும், பூச்சி தாக்குதல்கள் இருந்தாலும் பட்டு போவதற்கு காரணங்கள் உள்ளது.