இந்த வருடம் 2025 ல் 12 ராசிகளுக்கும் சனி பகவான் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன!! சனிப்பெயர்ச்சி எப்போது!!

Photo of author

By Janani

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி 29.3.2025 அன்று ஏற்பட உள்ளது. தற்போது கும்பத்தில் இருக்கக்கூடிய சனி பகவான் மீனம் ராசிக்கு செல்ல போகிறார். இந்த பெயர்ச்சியானது 2 1/2 வருடங்களுக்கு நீடிக்கும்.
இந்த சனி பெயர்ச்சி 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்பது குறித்து காண்போம்.
மேஷம்: விரைய சனி-70% நன்மை.
கழுத்து மற்றும் தலைப்பகுதிகளில் கவனமாக இருக்க வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். குடும்பம், தொழில், பணம் போன்றவைகளில் முன்னேற்றம் ஏற்படும். ஏழரை சனி தொடங்கினாலும் வெற்றியையே காண்பீர்கள்.
ரிஷபம்: லாப சனி- 95% நன்மை.
பல் மற்றும் ரத்தத்தில் பரவக்கூடிய தொற்று நோய்களில் கவனமாக இருக்கவும். பணப்புழக்கம் இரட்டிப்பாக அதிகரித்து லாபம் பெறுவீர்கள். உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
மிதுனம்: கர்ம சனி- 80% நன்மை.
இதயம் மற்றும் ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்வது நல்லது. அனைத்து தடைகளும் நீங்கி தொழில் மற்றும் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள். பெற்றோர்களிடம் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும்
கடகம்: பாக்கிய சனி- 90% நன்மை.
மன அழுத்தம் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை பார்த்துக் கொள்வது நல்லது. வார்த்தைகளில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும். மற்றபடி அனைத்தும் சிறப்பாக அமையும்.
சிம்மம்: அஷ்டம சனி- 76% நன்மை.
நரம்பு மற்றும் கால் சம்பந்தமான பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். உடற்பயிற்சி மேற்கொள்வது சிறப்பு. வாகனத்தில் கவனமாக இருக்கவும். தொழில் படிப்பு திருமணம் ஆகிய அனைத்தும் சிறப்பாக அமையும். கோபத்தை தவிர்ப்பது நல்லது.
கன்னி: கண்டக சனி- 70% நன்மை.
குடும்பத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அலர்ஜி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புதிய தொழில் ஏற்பட வாய்ப்புள்ளது. அனைத்து தடைகளும் நீங்கும். பெண்கள் ஆண்கள் விஷயத்திலும் ஆண்கள் பெண்கள் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
துலாம்: ரோக சனி- 95% நன்மை.
அடிவயிறு, முதுகு தண்டுவடம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். சனி மற்றும் குரு பெயர்ச்சி சாதகமாகவே அமையும். சுறுசுறுப்பாகவும் அனைத்திலும் வெற்றியை காண்பவர்களாகவும் இருப்பீர்கள்.
விருச்சிகம்: பஞ்சம சனி- 91%
வயிறு மற்றும் ரத்த அழுத்த பிரச்சனைகளில் கவனமாக இருக்க வேண்டும். புதிய முயற்சிகள் அனுகூலத்தை தரும். எதிரிகளிடம் கவனமாக இருப்பது நல்லது. அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்திடம் கவனமாக இருப்பது நல்லது.
தனுசு: அர்த்தாஷ்டம சனி 90%
தைரியம், தன்னம்பிக்கை, எடுத்த காரியத்தில் வெற்றி அனைத்தும் சிறப்பாக அமையும். ரத்த அழுத்தம், சக்கரை மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற நோய்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வாழ்க்கைத் துணையிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
மகரம்: சகாய சனி- 92%
பற்கள், காது, மூக்கு, தொண்டை போன்ற நரம்பு பாதிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். இல்லை என்று நினைக்க கூடிய அனைத்தும் கிடைக்கும். அனைத்து பிரச்சினைகளும் சிறிது சிறிதாக குறைந்து அனைத்து காரியத்திலும் அனுகூலத்தை தேடித்தரும். வார்த்தைகள் மற்றும் வண்டி வாகனத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
கும்பம்: பாத சனி- 65% நன்மை.
வயிறு மற்றும் மன அழுத்தத்தில் கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகளிடம் கோபத்தை வெளி காட்டக் கூடாது. கூடா நட்பு மற்றும் வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். அசையா அசையும் பொருட்கள் வந்து சேரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்: ஜென்ம சனி- 50% நன்மை.
தடங்கல்கள் மற்றும் சோம்பல்கள் இருக்கும். வயிறு, முதுகு, கால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தொழில் மற்றும் படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். வாகனம் மற்றும் பழக்கவழக்கங்களில் கவனமாக இருக்க வேண்டும். ஜென்ம சனி என்றாலும் கூட ஏற்றம் உண்டு.