அமித்ஷாவிடம் இ.பி.எஸ் பேசியது என்ன? அதிமுகவின் ஒருங்கிணைப்பு சாத்தியமா?

0
62
what-did-eps-say-to-amit-shah-is-the-merger-of-aiadmk-possible
what-did-eps-say-to-amit-shah-is-the-merger-of-aiadmk-possible

A.D.M.K B.J.P:அதிமுகவின் தற்போதைய நிலையைப்  பார்த்தால் அது நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் எதிர் கட்சியாக கூட மாற வாய்ப்பில்லை என்று அரசியல் களத்தில் பேச்சு நிலவுகிறது. ஓ.பி.எஸ், டி.டி.வி தினகரன், சசிகலா செங்கோட்டையன் என பலரும் அதிமுகவில் இருந்து பிரிந்திருக்கும் நிலையில் கட்சி மிகவும் வலுவடைந்து விட்டதாக அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

கட்சியின் இந்த நிலைமைக்கு எடப்பாடி பழனிசாமி தான் காரணம் என்று பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனாலும் அவர் தனது முடிவில் நிலையாக உள்ளார். இதற்கு காரணம் அவருக்கு தலைமையின் மேல் உள்ள பயம் என்றும் சொல்லப்படுகிறது. நேற்று டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த இ.பி.எஸ் ஒருங்கிணைப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.

இதில் அமித்ஷா இ.பி.எஸ்யிடம் கட்சியிலிருந்து நீக்கியவர்களை சேர்க்க வேண்டும் என்று வலியுறித்தியதாகயும், அதற்கு மறுத்த இ.பி.எஸ் அவர்களை மீண்டும் இணைத்தால் கட்சியில் குழப்பம் ஏற்படும் என கூறியதாகவும், என்னை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்காதவர்களை எப்படி கட்சியில் சேர்க்க முடியும்? என்று கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.

வேண்டுமென்றால் தே.ஜ.கூட்டணியில் சேர்த்து கொள்ளுங்கள் என்று திட்டவட்டமாக கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவரின் இந்த கருத்துக்கு பிரிந்து சென்றவர்களின் பதில் என்னவாக இருக்கும், இ.பி.எஸ் கூறியது போல் தே.ஜ.கூட்டணியில் இணைவார்களா இல்லை தனித்து செயல்படுவார்களா அல்லது திமுக உடனோ, தவெ.க உடனோ கூட்டணி அமைப்பார்களா என்பது தற்போதைய கேள்வியாக உள்ளது.

Previous articleஅதிமுக-பாஜக உறவில் விரிசலா? இ.பி.எஸ்யின் இறுதி முடிவு!
Next articleநீக்கப்பட்டவர்களின் அடுத்த நகர்வு என்ன? கூட்டணியா அல்லது தனித்த பாதையா? தொடரும் கேள்விகள்!