
BJP TVK: இன்னும் சில மாதங்களில் தமிழகத்தில் நடைபெறும் சட்டசபை தேர்தலுக்காக மாநில கட்சிகளை விட தேசிய கட்சியான பாஜக பல்வேறு முயற்சிகளை கையில் எடுத்து வருகிறது. அதில் ஒன்று தான் அதிமுக உடன் கூட்டணி. சுமார் ஒரு வருடத்திற்கு முன்பே அதிமுகவின் நிபந்தனைகளை ஏற்று அதனுடன் கூட்டணி அமைத்த பாஜக, அடுத்ததாக நயினார் நாகேந்திரன் தலைமையில் சுற்று பயணத்தையும் தொடங்கியுள்ளது. மேலும் பாஜகவை கொள்கை எதிரி என்று கூறிய தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் சேர்க்க முயற்சித்து வருகிறது.
ஆனால் விஜய் பாஜக உடன் கூட்டணி அமைக்க முடியாது என்பதில் தெளிவாக உள்ளார். இதற்காக அமித்ஷா எவ்வளவு முயற்சித்தும் அது நிறைவேறவில்லை. அமித்ஷா விஜய்யை நேரில் சந்தித்து பேசுவது மட்டும் தான் பாக்கி. இவர்களின் முயற்சி கை கூடாததால் ஆத்திரமடைந்த பாஜகவை சேர்ந்தவர்கள் விஜய்யை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். அது மட்டுமல்லாமல், விஜய்யை கூட்டணியில் சேர்க்கும் வேலையை பாஜக கை விட போவதாகவும் தகவல் வெளி வந்துள்ளது. அதற்கு பதிலாக, பாமக, தேமுதிக, ஜான்பாண்டியன் கட்சி, கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்கான பணியை தீவிரப்படுத்த போவதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. விஜய்யை கூட்டணியில் சேர்த்தால் அதிக வாக்குகள் வரும்.
அதாவது தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கலாம். பீகார் தேர்தலை போலவே தமிழகத்திலும் வரலாற்று சாதனை படைக்க முடியும் என்ற நோக்கத்தில் தான் பாஜக தவெகவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்தது. மேலும் அதிமுக பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதை போல விஜய்யும் இருக்க வேண்டும் என பாஜக நினைத்தது. ஆனால் விஜய் இவை எதற்கும் ஒத்து வரவில்லை என்பதால் அவரை தவிர்த்து வேறு கட்சியை கூட்டணியில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட அமித்ஷா உத்தரவிட்டுள்ளாராம். தவெகவை கூட்டணியில் சேர்க்க முயற்சித்ததற்காக விஜய் இருந்தால் மட்டும் தான் பாஜக ஆட்சி அமைக்க முடியும் என்று பொருளில்லை என பாஜகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் கூறுகின்றனர்.
