எல்லாரும் வெளியேறி விட்டால் நாங்கள் என்னதான் செய்வது! தலீபான்கள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

Photo of author

By Hasini

எல்லாரும் வெளியேறி விட்டால் நாங்கள் என்னதான் செய்வது! தலீபான்கள் வெளியிட்ட திடீர் அறிவிப்பு!

தலிபான்கள் திடீர் அறிவிப்பு ஒன்றை தற்போது அறிவித்து உள்ளனர். இது குறித்து தலீபான்களின் செய்தி தொடர்பாளர்  ஜபியுல்லா முஜாஹித் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்தார். அப்போது அவர் இவ்வாறு கூறினார். நாங்கள் இனி மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றுவதை இனி அனுமதிக்க மாட்டோம். அதில் நாங்கள் மகிழ்ச்சியும் அடையவில்லை.

மேலும் தாயகத்தை விட்டு ஆப்கானியர்கள் வெளியேறும் நோக்கத்துடன் விமான நிலையத்திற்கு செல்வதையும் அவர்கள் விரும்பவில்லை. அதே சமயம் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படையினர் உடன் வேலை செய்த ஆப்கானிஸ்தான் மக்கள்  தாராளமாக வெளியிடலாம். ஆப்கானிஸ்தானின் டாக்டர்கள் மற்றும் கல்வியாளர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. அவர்கள் தங்களின் சொந்த சிறப்பு பகுதிகளில் பணியாற்ற வேண்டும்.

மேலும் வெளிநாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானியர்களை தாயகம் திரும்ப அழைப்பு விடுத்துள்ளோம். இங்கே திரும்பி வாருங்கள். நமது நாட்டை நாமே கட்டியெழுப்புவோம். போர் எல்லாம் முடிந்துவிட்டது. இனி இங்கேயே வேலை செய்யுங்கள் என்றும் இயல்பாக வாழுங்கள் என்றும், இனி யாருக்கும் எந்த ஆபத்தும் கிடையாது என்றும் சொல்லியுள்ளோம்.

ஆப்கானிஸ்தானில் இதுவரை வேலைக்குச் சென்றவர்கள் நிரந்தரமாக வேலைக்கு போகக்கூடாது எனவும் நாங்கள் சொல்லவில்லை. அதற்காக சில வழி முறைகளை வகுக்க சொல்லியுள்ளோம். அதுவரை வேலைக்கு சென்ற பெண்கள் வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம். ஆப்கானிஸ்தானில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு பாதுகாப்பு கிடைப்பதையும் நாங்கள் உறுதிப்படுத்துவோம்.

மேலும் அவர்கள் தங்களுடைய பணிகளை நிறுத்தாமல் தொடர்ந்து செய்யலாம். ஆப்கானிஸ்தான் முழுவதும் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மதரசாக்கள் மருத்துவமனைகள், உள்ளூர் அரசு மற்றும் தொலைக்காட்சி நிலையங்கள் மற்றும் வானொலி நிலையங்கள் போன்றவை எப்போதும் போல செயல்படலாம் எனவும் கூறியுள்ளார்.