நம் வீட்டினுள் இருக்கும் எதிர்மறை சக்தியை விரட்டியடிக்க என்ன செய்ய வேண்டும்?

0
213

நாம் கோடி கோடியாக சம்பாதித்தாலும் நாம் வாழும் வீட்டில் நிம்மதி ,சந்தோஷம் இருந்தால் மட்டுமே நம் வாழ்க்கையில் வெற்றி பெற்றதற்கான அர்த்தமே.வீடு சிறியதாக இருந்தாலும் அதில் சந்தோஷம், நல்ல சிந்தனை, அமைதியான சூழல் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும்.

அதற்கு மாறாக வீட்டில் பிரச்சனை ,நிம்மதியற்ற சூழல், நோய் தாக்குதல், காரிய தடைகள் போன்றவற்றை தொடர்ந்து ஏற்பட்டுக்கொண்டே இருந்தால் அவ்வீட்டில் எதிர்மறை சக்திகள் ஆட்கொண்டுள்ளது என்பதனை அறிந்து கொள்ள வேண்டும்.

ஜோதிடரீதியாக நேர்மறை சக்திகள் வருவதற்கு எதிர்மறை சக்திகள் மிகப்பெரிய தடையாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை என்று கூறுகின்றனர்.

ஜோதிட சாஸ்திரத்தின்படி நேர்மறை எதிர்மறை சக்திகளை நம் வீட்டிற்குள் எவ்வாறு கொண்டுவருவது என்பதனைப் பற்றிய பதிவில் காண்போம்.

நமது வீட்டிலுள்ள ஒவ்வொரு அறையிலும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒரு செம்பு குடம், அல்லது பித்தளை குடம் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தினந்தோறும் காலையில் தண்ணீரை ஊற்றி வைக்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்த உடன் அந்த தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி விட வேண்டும். இவ்வாறு செய்தால் உங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நேர்மறை ஆற்றல்கள் உங்களை வந்து சேரும்.

செப்பு அல்லது பித்தளை அல்லது கண்ணாடி குடத்தில் தண்ணீர் ஊற்றி வைப்பதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை அந்த தண்ணீர் இழுத்துக் கொள்ளுவதால் உங்கள் வீட்டில் எப்போதும் நேர்மறை ஆற்றல் நிலவும்.ஆனால் மறந்தும் கூட ஒருநாள் வைத்த தண்ணீரை மறுநாளும் அப்படியே வைத்து விடக்கூடாது என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது.

Previous articleவிரலில் இதை தடவி சப்பினால் தொடர் விக்கல் பிரச்சனைக்கு நொடியில் தீர்வு கிடைக்கும்!!
Next articleஉடலின் எந்த இடம் துடித்தால் என்ன பலன் என்று தெரியுமா?